Latest News

February 14, 2018

ஈபிடிபி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்தன
by admin - 0

தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாணத்தில் தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆதரவினை வழங்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது.



கடந்த தினத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி , வட மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர மற்றைய உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க எவ்வித கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு உள்ளுராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் , இவ்வாறு ஆதரவளிக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் 6 மாதத்திற்குள் மக்களுக்காக செயற்படாவிட்டால் அதிலிருந்து வௌியேற தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments