Latest News

February 15, 2018

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளிப்பு
by admin - 0

ஈழத்தில் நடந்தேறிய போர்க் குற்றங்கள், மானுடத்திற்கெதிரான குற்றங்கள் என்வற்றுக்கான சர்வதேச நீதி விசாரணைக்கான உந்துதல்களை ஒரு கூட்டுமுயற்சியாக முன்னெடுக்கும் படி பிரதமர் தெரேசா மே இடமும் அயலுறவுச் செயலர் கௌரவ பொறிஸ் ஜோன்சனிடமும் வலியுறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய இராட்சிய பாரளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் சென்று வழியுறுத்தி வருகின்றார்கள் அந்த வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க செயற்பாட்டாளர் கிஷாந்தன் சந்திரராசா அவர்களின் ஏற்பாட்டில் கௌரவ பாராளமன்ற உறுப்பினர்கள்   Alex chalk, stephen hammond அவர்களை 2/2/2018 அன்று சந்தித்து மகஜர் சமர்ப்பித்தனர் அதில் குறிப்பிட்ட  விடயங்களாக





. ஐக்கிய   இராச்சியமும் இலங்கையும் இணைந்து ஐப்பசி 2015 இல் மேற்கொண்ட ஐநா மனித உரிமைகள் சபையின் 30ஃ1 தீர்மானப்படி கலப்பு நீதிமன்று வாயிலாக நீதி, சமாதானம் மற்றும் தமிழருக்கான தீர்வு ஒன்றினைப பெற்றுக்கொடுத்தல்.

• இலங்கைப் படைகள் வடகிழக்கில் ஈடுபட்டிருக்கும் நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்தல்

• இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுதல் தற்போது தடுத்துவைக்கப்படடு; ள்ளோரின் பெயர் மற்றும் தடுப்புமுகாம்களின் பட்டியல் என்பவற்றுடன் விடுதலை செய்யப்பட்டோர் பட்டியலும் யாரிடம் கையளிக்கப் பட்டனர் என்ற விபரங்களை வெளியிடுதல்.

• நீதி விசாரணையின்றித் தடுத்துவைக்கப்படடு; ள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.

• விடுதலை பெற்ற அரசியல் கைதிகள்; புனர்வாழ்வளிகக் ப்பட்டு விடுதலையான போர்க்கைதிகள் சிலரும் மர்மமான முறையில் உயிரிழந்துளள் னர். விடுதலையான சிலர் தடுப்பின் போது தமக்கு விஷஊசி ஏற்றப்பட்டதாகவும் கூறியுள்ளனர். 

இது பற்றி வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் விசாரணையை வலியுறுத்தியிருக்க அமெரிக்காவும் பரிசோதனைக்காக தகுதி வாய்ந்தோரை அனுப்பவுமுள்ளது. இலங்கை பொதுநாலவாயத்தில் உள்ளமையாலும் மகாராணியே பொதுநாலவாய அமைப்பின் தலைவி என்பதாலும் இது பற்றி பாராறுமன்றத்திலும் ஐநா விலும் பிரித்தானியா குரல் கொடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பிலுள்ளது.

• யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவர் இலங்கைக் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டமை தமிழ் இனஅழிப்புக் கட்டமைப்பின் ஓர் அங்கமென்பதால் இப்படியானவற்றைத் தடுத்து நிறுத்தல்.

« PREV
NEXT »

No comments