ஈகைப்பேரொளி முருகதாஸின் 9ம் ஆண்டு நினைவுநாள் லண்டனில் அனுட்டிப்பு
2009ம் ஆண்டு மாசி மாதம் 12ம் திகதி உலகத் தமிழர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி தன் இன்னுயிரை ஐநா முன்றலில் தீக்கிரையாக்கினான் முருகதாஸ்.
கட்டுக்கடங்காத கோபம், உலக நாடுகளின் அலட்சியத்தால் வந்த விரக்தி தன் உயிர் ஈய்ந்தாவது எம்மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதை நிறுத்தி விடமாட்டேனா என்ற ஆதங்கம், எம் அன்புக்குரியவனை எம்மிடம் இருந்து பிரித்து விட்டது.
அம் மாவீரனின் 9ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு இன்று லண்டன் ஹென்டனிலுள்ள அவரது நினைவுத்தூபியில் நடைபெற்றது.
அன்னாரின் உறவினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு ஈகைப்பேரொளிக்கு தம் அஞ்சலியைச் செலுத்தினர்.
No comments
Post a Comment