Latest News

January 12, 2018

புலிகளாக மைத்திரியின் கட்சி அழைப்பு - தேர்தலில் நடக்கும் நாடகங்கள்
by admin - 0

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” என மைத்திரியின் கட்சி யாழில் பாடல் ஒலிக்க விட்டுள்ளது 


யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. யாழில் உள்ள தனியார் விடுதி பிள்ளையார் இன்னில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தேசிய புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.  




தேசியத் தலைவர் அவர்களின் படத்தை போட்டு முகநூலில் வாழ்த்து  தெரிவித்த இளைஞர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ள அதே வேளை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது 

« PREV
NEXT »

No comments