Latest News

January 22, 2018

இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் அறிமுக நிகழ்வு
by admin - 0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படவுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான  வழிகாட்டல் அறிமுக நிகழ்வு 27.01.2018 சனிக்கிழமை யாழ்பாணம் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில்  காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. இவ் வழிகாட்டல் அறிமுக நிகழ்விற்க்கு பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து பரீட்சார்த்திகளையும்  தவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் அறிவித்துள்ளார்


இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது     

அத்துடன்  பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான  பரீட்சை வழிகாட்டல் வகுப்புக்கள் பிரதி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 1 மணி வரை மேற்குறித்த பாடசாலையில் இடம்பெறவுள்ளது பரீட்சை வழிகாட்டல் வகுப்பில்  இலக்கணம் , சாத்திரம்  , உரைநடை  , இலக்கியம்  , வரலாறு ஆகிய ஐந்து பாடங்களும் இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுவோர் என இரு பிரிவாக தனித்தனியே வகுப்புகள் இடம்பெறவுள்ளது. பரீட்சை சித்திரை மாதம் 3ஆவது வாரத்தில் இடம்பெறவுள்ளது. எனவே பரீட்சைக்கான வழிகாட்டல் அறிமுக நிகழ்விலும் வழிகாட்டல் வகுப்புக்களிலும்  விண்ணப்பதாரிகள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு  அறிவித்துள்ளார்.(54)
« PREV
NEXT »

No comments