குறிப்பாக ஆனோல்ட் தெரிவு தொடர்பில் தமிழரசுக்கட்சியிடையே மூண்டுள்ள மோதல்கள் மற்றும் பங்காளிக்கட்சிகளது அதிருப்தியையடுத்து பின்னர் அவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளை தாண்டி சில்லறைகளிற்கும் குனிந்து நிற்பதிலும் பார்க்க அரசியலே வேண்டாமென்ற நிலைப்பாட்டிற்கு பங்காளிக்கட்சிகள் வந்துள்ளன. கிளிநொச்சியிலும் இணக்கம் காணப்பட்டபடி ஆசனப்பங்கீடு வழக்க முடியாதென தமிழரசுக்கட்சி எம்.பி சிறிதரன் தெரிவித்துள்ளார். புளொட், ரெலோ இரண்டு கட்சிகளிற்கும் தலா 2 வீதம் ஆசனங்கள் வழங்கப்படுவதென இணக்கம் காணப்பட்ட போதிலும், இரண்டு கட்சிக்கும் தலா ஒவ்வொரு ஆசனம் மட்டுமே வழங்கலாமென கூறியுள்ளார்.
இது தொடர்பில் நாளை ரெலோ, மாவை சேனாதிராசா பேச்சு நடக்கிறது. புளொட் இந்த பேச்சில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. ரெலோ- மாவை பேச்சில் இணக்கம் காணப்படாவிட்டால், கிளிநொச்சியில் ரெலோ, புளொட் இரண்டும் போட்டியிடாமல் ஒதுங்குமென இரண்டு கட்சிகளின் உயர்பீடங்களும் முடிவு செய்துள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளே அவசர ஊடக அறிக்கையாக வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment