பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று மாலை (இலங்கை நேரப்படி) மாலை 3.16 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவுகோலாக பதிவானது. டடைன் பகுதிக்கு 324 கிமீ தொலைவில் சுமார் 89 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.
நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதாகவும் அதன் நகர்வை வைத்தே இலங்கை மற்றும் தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு பற்றி கூற முடியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கான காலம் இன்னும் இருக்கையில் மேலும் மழை பொழிய வாய்ப்புள்ளது என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
No comments
Post a Comment