Latest News

November 18, 2017

2004 சுனாமி வரும் என்று சென்னவர் மீண்டும் சுனாமி வரும் என அறிவிப்பு -பீதியில் மக்கள்
by admin - 0

இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன.


இவை கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், மேலும் இலங்கையில் கடல் உள்வாங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களாக வதந்தி என்று சொல்லி, மீண்டும் சுனாமி 2017, டிசம்பர் 31க்குள் வருவதாக ஒரு தகவல் வெளியானது.

அதில் சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால் இந்தமுறை முன்பை விட “பலமடங்கு” அளவில் பெரியது என்பது தான் அதிகாரப் பூர்வமான தகவலாக இருந்தது.


11 நாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்றும, இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே இந்தியப்பெருங்கடலில் இருந்து தான் என்றும் கூறப்பட்டது.

இந்த தகவலைத் தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association – Director Mr.BabuKalayil, என்பவர்.

இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர். அப்போது இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை.ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இவர்தான் தற்போது “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன்,

இரு மாநில முதல்வர்களுக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்.

இந்த தகவலின் உண்மை தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருந்த போதிலும் பேரிடர் மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தாங்களாகவே தற்காத்து கொள்ளும் திறனாவது மக்களிடையே வளரும்.

இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது. ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்.

« PREV
NEXT »

No comments