Latest News

November 03, 2017

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 57 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும்
by admin - 0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 57 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் 04.11.2017 சனிக்கிழமை யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் நித்திய தசீதரன் அரங்கில்  சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் சித்தாந்த சிரோமணி மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ளது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் நடைபெறும் இந் நிகழ்விற்க்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன்  கலந்து கொள்ளவுள்ளார்.

சிறப்பு  விருந்தினர்களாக சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலய பிரதம குரு அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை தலைவர் சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் , நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சதா மகாலிங்க சிவக்குருக்கள் , யாழ்ப்பாணம் நந்தலாலா இரும்பகம் உரிமையாளர் லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் , யாழ்ப்பாணம் கே.எஸ்.ரி. ரெக்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் சிற்றம்பலம் , இணுவில் ஸ்ரீ பரராஜப்பிள்ளையார் கோவில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் செல்வி சு.மீனாட்சி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வண்ணை சாந்தையர் மடம் கற்ப்பகப் பிள்ளையார் கோவில் வழிபாட்டின்  பின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சிலைக்கு மாலை அணிதல் உடன் நிகழ்வு ஆரம்பமாகும். 
நந்திக் கொடி ஏற்றலில் கொடிக்கவி பாடலினை சைவப்புலவர் சண்முகவடிவு தில்லைமணி அவர்களும் திருமுறையினை சைவப்புலவர் கவிதா கதிரமலை அவர்களும் பாடுவார்கள். வரவேற்ப்புரையினை ஓய்வுநிலைப் பொறியிலாளர் சைவப்புலவர் வ.தயாபரசிவம் ஆசியுரையினை சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் அருளுரையினை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தலைமையுரையினை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை முதன்மை விருந்தினர் உரையினை பேராசிரியர் மா.நேதநாதன் ஆகியோர் வழங்குவார்கள்.

காலை 10.45 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறும் கௌரவிப்பினை அகில இலங்கை சைவப்புலவர் சங்கப் பொருளாளர் சைவப்புலவர் ச.முகுந்தன் நெறிப்படுத்துவார். கௌரப்பட்டங்களாக சைவாகமபூஷணம் பட்டத்தினை சிவஸ்ரீ க.கிருபானந்தக்குருக்கள் , சிவஸ்ரீ சதா மாகாலிங்கசிவக்குருக்கள் ஆகியோர் பெறவுள்ளார்கள்.  இவர்களுக்கான அறிமுகஉரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க பிரச்சார அமைச்சர் சைவப்புலவர் கு.சுமுகலிங்கம் , உதவித் தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் கா.கமலநாதன் ஆகியோர் வழங்குவார்கள்.

சைவப்புரவலர் பட்டத்தினை லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் , சுப்பிரமணியம் சிற்றம்பலம் ஆகியோர் பெறுகின்றார்கள். இவர்களுக்கான அறிமுக உரையினை உதவிச் செயலாளர் சைவப்புலவர் ந.புகன்ஸ்ரீந்திரன் , அச்சுவேலி தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளரும் சங்க செயற்க்குழு உறுப்பினருமாகிய சைவப்புலவர் சி.நந்தகுமார் ஆகியோர் வழங்குவார்கள். கௌவிப்பு நிகழ்வில் கௌரவத்தினை  இணுவில் ஸ்ரீ பரராஜப்பிள்ளையார் கோவில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் செல்வி மீனாட்சி பெறுகின்றார். அறிமுக உரையினை சைவப்புலவர் ஆனந்தி ஜெயரட்ணம் , சைவப்புலவர் உருத்திராதேவி பகீரதன் ஆகியோர் வழங்குவார்கள்.

இளஞ்சைவப்புலவர் பட்டமளிப்பினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் செ.கந்தசத்தியதாசன் நெறிப்படுத்துவார். திருமதி ஜயமோகனா சிவஞானசுந்தரம் - கொழும்பு , முருகன் சேமகரன் - அவுஸ்ரேலியா , செல்வம் கேமநாதன் - பொலநறுவை  , திருமதி கமலாதேவி சபாரத்தினம் - அரியாலை , நாகநாதன் அகிலன்  - கீரி மன்னார் , செல்வி நித்தியா இராமலிங்கம் - பொலநறுவை, செல்லத்தம்பி சதீஸ்குமார்  - பொலநறுவை , திருமதி சுவாசினி ரவேந்திரன் - பொலனறுவை  , செல்வி சின்னையா  வதனி - பன்னவெட்டுவான் மன்னார் , திருமதி ருக்மணிதேவி  சிவபாலன்  - கொழும்பு 4 , கந்தசாமி கௌசிகன் - தேத்தாத்தீவு மட்டக்களப்பு , தம்பிஜயா மனோஜ்குமார் - இணுவில் , செல்வி அர்ச்சனா - -முந்தல் புத்தளம் , செல்வி பஞ்சலிங்கம் குயிலினி  - பூநகரி , செல்வி லோஜினி முத்துக்குமார் - பொலநறுவை , செல்வி பஞ்சலிங்கம் அநிதா  - பூநகரி , திருமதி நிர்மலா தனசிங்கநாதன் - கொழும்பு 6 , செல்வி மந்தாகினி பாலச்சந்திரன் - மல்லாகம் , செல்வி சின்னராசா சனுஷ்யா - அளவெட்டி , திருமதி நரேந்திரதிலகை நடராஜா - கொழும்பு 6 , செல்வி வேல்நாயகம் லவனியா - பொலநறுவை , குணசிங்கம் கந்தபாலன் கோப்பாய் ஆகியோர் இளஞ்சைவப்புலவர் பட்டத்தினை பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.

அமர்வு 2 காலை 11.30 மணிக்கு சைவநாதம் 7 மலர் வெளியீடு அகில இலங்கை சைவப்புலவர் சங்க உபதலைவர் சைவப்புலவர் கலாபூஷணம் அ.பரசுராமன் தலைமையில் இடம்பெறவுள்ளது. மலருக்கான வெளியீட்டுரையினை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ணஐயர் வழங்குவார். முதற்ப்பிரதியினை நந்தலாலா இரும்பக உரிமையாளர் லயன் திருநாவுக்கரசு சீவரத்தினம் பெற்றுக்கொள்வார். 

அமர்வு 3 வலிகாமம் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சைவப்புலவர் சு.தேவமனோகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. கலை நிகழ்வுகளாக புத்தூர் கன்னியர் வைரவர் அறநெறிப்பாடசாலை மாணவி செல்வி பானுஜா தில்லைமணி அவர்களின் கதாப்பிரசங்கம் நிகழ்வு வலயமட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற யா ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவர்களின் புராணபடணம் வடமாகாணப் போட்டியில் முதலாமிடத்தினைப்  பெற்ற அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவர்களின் பண்ணிசை ஆகியன இடம்பெறும் நன்றியுரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் த.குமரன் வழங்குவார்.
« PREV
NEXT »

No comments