Latest News

October 01, 2017

மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ளது- வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன
by admin - 0

மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ளது- வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன- 


 
சிவஞானம் மிதிலாதேவி தனது மகன் குறித்த செய்தி எப்படியாவது கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடும் வேதனையுடன் காத்திருக்கின்றார். 

 
எனது மகன் சிறைச்சாலை ஒன்றில்  தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன் , அதன் பின்னர் அவர் தொடர்பாக எந்த தகவல்களும் இல்லை  என்கிறார் மிதிலாதேவி ,






 
அவர் எங்களின்  இரண்டாவது மகன் சிவஞானம் பார்த்தீபன் எங்கள் அனைவரினதும் பாசத்திற்குரியவர் அவர் இல்லாமல் நாங்கள் படுகின்ற வேதனையும் துன்பமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதது என தெரிவிக்கும் அவர் கண்ணீர்விட்டு அழ ஆரம்பிக்கின்றார்.
 
இவ்வாறான துன்பத்தை அனுபவிப்பது மிதிலாதேவி  மாத்திரமல்ல, காணமல்போன தங்கள் குடும்பத்தவர்கள் குறித்த பதிலுக்காக காத்திருக்கும் பலரில் மிதிலாதேவியும் ஓருவர்.
 
 காணாமல்போனவர்களிற்காக காத்திருப்பவர்கள் பல தொடர்ச்சியாக போராட்டங்களை வடக்கில் முன்னெடுத்துள்ளனர்.  அவ்வாறான போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு 200 நாட்களை கடந்துள்ளது.
 
எங்கள் உறவுகள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்ற தகவலை அவர்கள் தெரிவிக்கவேண்டும் அவ்வாறு அவர்கள் தெரிவிக்கும் வரை நாங்கள்  எங்கள் போராட்டங்களை தொடருவோம் என தெரிவிக்கின்றனர் அந்த மக்கள் .
 
2015இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான பொறிமுறையை அமைப்பது குறித்த வாக்குறுதியும்;காணப்படுகின்றது.
கடந்த வாரம் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக செல்வதற்கு முன்னதாக இலங்கை ஜனாதிபதி சிறிசேன காணமால்போனனோர் குறித்த அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
 
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட உண்மை ஆணைக்குழு மற்றும் நீதிபொறிமுறை கள்  அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகள் இன்னமும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன.
 
படையினர் தம்வசம் வைத்திருந்த தனியார் காணிகளில் சிலவற்றை பொதுமக்களிடம் ஓப்படைத்துள்ளனர்.எனினும் பெருமளவு நிலங்களை  படையினர் இன்னமும் தமது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருக்கின்றனர்.
 
ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி 30 வருட யுத்தத்தின் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகளை மெதுவாகவே முன்னெடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்தார்.
ஆனால் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலரின் சார்பாக வாதாடும் முக்கிய தமிழ் சட்டத்தரணிகளில் ஓருவரான கே எஸ் இரத்தினவேல் அரசாங்கத்திடம் அர்ப்பணிப்பு இல்லை என்கிறார்.
 
அரசாங்கத்திடம் படையினரை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர் அவர்கள் மோதல்போக்கில் உள்ளனர் என்கிறார்இரத்தினவேல்.
 
படையினரும் பொலிஸாருமே காணாமல்போதலிற்கு காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார்.
 
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவது என்பது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கையில்லை என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு தெரிவித்துள்ளார்.அரசாங்கம் தனது அனைத்து மக்களினதும் உரிமை தொடர்பான விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கான அத்தியவாசியமான விடயம் அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அரசாங்கமோ அதற்கு சிறிது காலம் எடுக்கும் என தெரிவி;க்கின்றது.
அதேவேளை என்னநடந்தது என்ற உண்மையை அறிவதற்காக நாங்கள்  பெரும வலியையும் வேதனைiயும் அனுபவிக்கின்றோம் என  ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
நீதி;க்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
« PREV
NEXT »

No comments