Latest News

October 02, 2017

தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
by admin - 0

தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு .


தமிழீழ விடிவிற்க்காய் தன்னுயிர் ஈர்த்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு கிழக்கு இலண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .

1987 ல் இந்திய ஆக்கிரமிப்பு படையுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை சபரி அவர்களின் தாயார் திருமதி சாவித்ரி ஆனந்தன் அவர்கள் பொது சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழீழ மண்ணுக்காய் தன்னுயிரை ஈகம் செய்த 2 ம் லெப் பெரியதம்பி அவர்களின் மகனும் வடகிழக்கு லண்டன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளருமான திரு . பெரியதம்பி பிரேமதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் .ஈகை சுடரினை 15-09-1990 இல் யாழ்கோட்டை மீதான முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்த சண்முகசுந்தரம் பிரபாகரன் என்ற இயற்பெயர் கொண்ட கப்டன் கீரோராஜ் அவர்களின் தந்தையார் திரு குழந்தைவேலு சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்றி வைத்தார்.
















திலீபனின் நினைவுகளை சுமந்து கவிதைகள் சிறுவர்களுடைய நடனம் மற்றும் 30 ஆண்டுகள் கடந்தும் அழியாத நினைவாய் நினைவு சுமந்த உரைகளும் இடம்பெற்றன










நிறைவாக தமிழீழ தேசியகொடி கையேந்தலுடன் “நான் உயிரினிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கின்றேன்.....
நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்."என்ற உறுதிமொழியோடு மேற்படி நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.









« PREV
NEXT »

No comments