Latest News

September 28, 2017

முன்னாள் போராளி குடும்பத்தினரிடம் புலனாய்வுபிரிவு தீவிர விசாரனை.
by admin - 0

முன்னாள் போராளி குடும்பத்தினரிடம் புலனாய்வுபிரிவு தீவிர விசாரனை.
போராளிகள்

 
தமிழீழ விடுதலைப்பு லிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள்  
பெண் போராளி குடும்பத்தினரிடம் நேற்று முன்தினம் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புலிகள் அமைப்பில் இருந்து யுத்தம் மௌனித்தபோது புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட தங்கவேலாயுதம் நிசாந்தினி என்ற முன்னாள் போராளி கடந்த 2016 ம் ஆண்டு பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற நபர் ஒருவரை திருமணம் செய்து பிரித்தானியாவில் குடியேறியுள்ளார். 

குறித்த பெண் கடந்த  தைமாதம் 16 ம் திகதி பிரித்தானியாவில் இருந்து இலங்கையில் யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு அத்தாயில் உள்ள தனது தாய்வீட்டுக்கு சென்றபோது பிரித்தானியாவில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலுக்கு அமைவாக என கூறி புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு யாழ் ஊரேழு இராணுவ முகாமில் வைத்து விசரணை செய்யப்பட்டுள்ளார். 

தீவிர விசாரனையின் பின்னர் கடும் நிபந்தனையில் விடுவிக்கப்பட்ட குறித்த பெண் போராளி மீண்டும் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். அவர் தற்போது பிரித்தானியாவில் இயங்கிவரும் புலிகளின் அமைப்புக்களுடன் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கூறி அவர் வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை சென்ற புலனாய்வு அதிகாரிகள் பெண்போராளி தொடர்பாக தகவல்களை பெற்று சென்றுள்ளனர். 

அத்துடன் தாம் அழைக்கும் போது பெற்றோரை மேலதிக விசாரணைகளுக்கு சமூகம் தருமாறும் கோரியுள்ளனார். இலங்கையில் நல்லாட்சி ஆட்சிக்கு பின்னர் முன்னாள் போராளிகள் பலர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதுடன் முன்னாள் போராளிகளின் குடும்பங்களின் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ,உயிர் அச்சுறுத்தல் போன்ற பல சம்பவங்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் தொட்பாக ஐ நா சபையில் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments