Latest News

September 27, 2017

வித்தியா கொலை! தீர்ப்பு சற்றுமுன் வெளியானது.. ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி
by admin - 0

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உட்பட ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.






யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று கூடியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.

தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார். இறுதியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,

3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,

4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன்,

5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன்,

6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன்,

8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன்,

9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் என்போருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments