Latest News

August 13, 2017

வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்
by admin - 0

வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்

இன்று வீரமுனையில் பெரும் சோகத்தின் மத்தியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று வீரமுனை படுகொலை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது!


இன்று அம்பாரை மாவட்ட வீரமுனை தமிழ் கிராமத்தில் பெரும் சோகத்தின் மத்தியில் சம்மாந்துறை பாசிச முஸ்லிம் காடையர்களின் கோரப்பசிக்கு இரையாகிய தமிழர்களின் உயிர் ஆண்மா ஈடேற்றம் பெற நினைவஞ்சலி செலுத்தப்பட்டது!

1990ம் ஆண்டு 8ஆம் மாதம் 12ம் திகதி அதாவது இன்றைய தினம்  சம்மாந்துறை வீரமுனையின் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் மக்களை வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் 
ஆலய வளாகம் என்று கூட பார்க்காமல் விரட்டி விரட்டி பெண்கள் சிறுவர்கள்,கர்ப்பணிகள்,  முதியவர்கள் என்று கூட பாராது மிகவும் அகோரமான முறையில் பாசிச கொடுங்கோல் இஸ்லாமிய  காடையர்களால் கொன்று குவித்தனர். இவர்கள் தமிழர்கள் என்ற
காரணத்திற்காகவே கொன்று பிணமாக்கப்பட்டார்கள்.

இவ் ஊரில் ஓடமுடியாமல் நாலாபுறமும் சுற்றி வளைத்து வீரச்சோலை, மல்லிகைத்தீவு, சொறிக்கல்முனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி போன்ற தமிழ் கிராமத்தையும் நரபலியெடுத்து கோரத்தாண்டவம் ஆடிய முஸ்லிம் பயங்கரவாதிகள் இன்று வீரமுனை தமிழர் படுகொலை மறைக்க ஏறாவூர் முஸ்லிம் சுகைதாக்கள் தினம் எனும் பெயரில் தமிழரிடம் தாம் செய்த தவறை மன்னிப்பு கேட்காமல் இன்னும் தமது இனக்குரோதத்தை விதைக்கின்றார்கள்.

 அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும் என்றே இந்த இனப்படுகொலை இடம்பெற்றது இப்படியான விடயங்களை செய்தவர்களுக்கு இன்னும் தண்டனை கூட கிடைக்கவில்லை இருந்த போதிலும் இங்கு கொன்று குவிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி நினைவேந்தல் வருடா வருடம் நடாத்தப்படுகின்றது.


 இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பா.உ கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பா.உ சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் கலையரசன் துரைரெட்ணம் சமூக சேவையாளர் ஜெயசிறில் மற்றும் கோயில் தர்மதத்தாக்கள் ஊர்பிரமுகர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உயிர் நீத்த உறவுகளின் உறவுகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு ஈகச்சுடர் ஏற்றி நினைவேந்தலை நடாத்தினர்.

மறக்கமுடியாதவலி  மன்னிக்கமுடியாத வெறி
சிதைந்துபோன கனவுகள்...
சிதையாதநினைவுகள்..
கொப்பழிக்கும்..
கோபக்கனல்கள்...
 அழியாத நினைவுச் சுவடுகள்...










விடிகின்ற விடுதலைநோக்கிய நினைவுகளுடன்....
படம், தகவல்:- Retnathurai Haran
« PREV
NEXT »

No comments