பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்த திட்டமிட்டு, கடந்த இரண்டு வருடம் வெற்றிகரமாக நடாத்தியமை அனைவரும் அறிந்ததே.
இதனைதொடர்ந்து மூன்றாவது தடவையாக நேற்று 30ஆம் திகதி Morden park, London road, SM4 5HE எனும் இடத்தில் விளையாட்டு விழாவினை தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்புடன் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.இதில் துடுப்பாட்டம், உதைப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் சில கலாசார விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு இந்த விளையாட்டு போட்டியை சிறப்பித்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக நல உதவிஅமைச்சர் திருசொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களினதும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்தன.
No comments
Post a Comment