Latest News

July 13, 2017

பிரித்தானியாவில் ஈழத் தமிழரைக் கடத்திய ஈழத் தமிழர் சிக்கிய சரித்திரம்
by admin - 0

இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரானா ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இதன்படி சிவானந்தன் சுரேன் என்பவர் தனது மனைவியைத் திருமணம் செய்து தனக்குப் போட்டியாக வரப்போகிறார் என்ற மனோநிலையில் அவரைக் கடத்திக் கொலை செய்ய ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய மூவர் இணைந்து 12 மணி நேரமாக சுரேனைக் கடத்தி வைத்திருந்து தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களின் பின்னர் சுரேன் கொல்லப்படார்.
கொல்லபட்ட சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது உச்சந்தலையில் மோசமான காயங்கள் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண்ணும் கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
இதனால் சுரேன் நீண்ட கால வன்முறைக்கமையவே கொல்லப்பட்டார் எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரனின் மனைவியான ரகுபதியும் சுரேனும் ஏற்கனவே பல வருடங்களின் முன் இலங்கையில் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் முக நூல் வாயிலாக தம்மை மீண்டும் அறிமுகப்படுத்தியதோடு இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது. ரகுபதியின் கணவரான பாலச்சந்திரன் ரகுபதியை தவறான நடத்தையுள்ளவர் என்று விவகரத்துக்கு முடிவெடுத்தார். ரகுபதியும் தனது மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு முடிவு கட்ட விவாகரத்துக்கு தயாரானார். பின்னர் அவர்களுக்கு விவாகரத்து உறுதியானது.
இதன் பின்னரே சுரேனுக்கும் ரகுபதிக்கும் உள்ள தொடர்பை வைத்து சுரேனை பழிவாங்க பாலச்சந்திரன் திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments