ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தனது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்ள தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்ட , பிரதமர் தெரீசா மே அவர் முயற்சியில் தோல்வியடைந்தார்.
ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, ஆனாலும், அதுவே தனிப்பெரும் கட்சியாக இருக்கும்.
தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, தேறாத கட்சி என்று கைகழுவப்பட்ட தொழிற்கட்சி, எதிர்பாராத விதமாக பல இடங்களை வென்றிருக்கிறது.
பொருளாதாரத்தில் `சிக்கன நடவடிக்கை` அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் கூறியிருக்கிறார்.
தெரீசா மே பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.
சில கன்சர்வேடிவ் கட்சியினர் அவர் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
கடந்த தேர்தலில் இருந்த்தை விட வாக்குப்பதிவு இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-BBC
No comments
Post a Comment