Latest News

June 09, 2017

பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பணயம் வைப்பு
by admin - 0

பிரிட்டனில் நியூகாசல் பகுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் பலரை பணயம் வைத்திருப்பதாக போலிஸார் கூறுகின்றனர்.


பைக்கர் பகுதியில் கிளிஃபோர்ட் தெருவில் உள்ள அந்த அலுவலகத்துக்குள் ஆயுதபாணி நுழைந்துள்ளார். உள்ளே பல பணியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலிஸார் கூறுகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதி தடுக்கப்பட்டுள்ளதுடன், போலிஸ் சமரச பேச்சுவார்த்தையாளர்களும் அங்கு வந்துள்ளனர்.

அந்த நபரை அந்த அலுவலகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்பாகவே தெரியும் என்றும் இதனை தனியான ஒரு சம்பவமாகவே இப்போதைக்கு கருதுவதாகவும் நோர்தம்பிரியா போலிஸார் கூறியுள்ளனர்.

இதுவரை எவரும் காயமடைந்ததாக தெரியவில்லை.

பைக்கருக்கான ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் அருகில் இருந்த மாணவர்களுக்கான விடுதியில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

அந்த பகுதியை தவிர்க்குமாறு பயணிகளுக்கு ரயில் சேவையை நடந்தும் நிறுவனம் கூறியுள்ளது.


 
« PREV
NEXT »

No comments

Copyright © TamilNews விவசாயி All Right Reserved