இலங்கையில் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவர் போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியன்மார் நாட்டை 30 ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
3 நாட்களுக்கு முன்னர் சிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் ஒரு கான்ஸ்டபிளால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கொகுவல போலிசிடம், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரான மூத்த சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கின்றார்.
அந்த பெண்ணின் வாக்குமூலத்தை போலிஸார் பெறுவதில் மொழி பிரச்சனை இருப்பதால் ரோஹிஞ்சா மொழி தெரிந்த மொழி பெயர்பாளர் ஒருவரின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
சுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி தமிழ் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்.
படகு வழி தவறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த நிலையில் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் கண்காணிப்பில் இலங்கையில் தஞ்சம் பெற விரும்புகின்றார்கள்.
அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-
BBC
-
BBC
No comments
Post a Comment