Latest News

June 14, 2017

முதலமைச்சரை கவிழ்க்க சிங்கள கட்சிகளது உதவி
by admin - 0

பெரும்பான்மையின சிங்களகட்சிகளது உறுப்பினர்களது ஆதரவுடன் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரினை பதவிகவிழ்க்க மேற்கொண்ட தமிழரசுக்கட்சியினது சதி அம்பலமாகியுள்ளது.அவ்வகையினில் தமிழரசுக்கட்சி சார்ந்த 14 பேரும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பினில் அமைச்சராக இருந்த டெனீஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா,மஹிந்த தரப்பினை சேர்ந்த ஜெயதிலக பண்டார றிசாத் பதியுதீனின் சகோதரனான றிவ்கான் உள்ளிட்ட 7 பேருமாக 22 பேர் வடமாகாண ஆளுநரிடம் முதலமைச்சருக்கெதிரான பிரேரணையினை கையளித்துள்ளனர்.
 


இதனிடையே அடுத்த முதலமைச்சர் கதிரையினை கைப்பற்றுவதில் சத்தியலிங்கத்திற்கும் ,சீ.வீ.கே.சிவஞானத்திற்குமிடையே முறுகல் நிலை உச்சமடைந்துள்ளது.
வடமாகாணசபையினில் ஆளும் கட்சியான கூட்டமைப்பினில் தமிழரசுக்கட்சிக்கு 14 உறுப்பினர்களும் ஏனைய பங்காளிக்கட்சிகளிற்கு 16 உறுப்பினர்களும் உள்ளனர்.இவர்களுள் கட்சி சாராத முதலமைச்சர்,அனந்தி சசிதரன் போன்றவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.இதனிடையே எதிர்தரப்பிலுள்ள சி.தவராசா கட்சியற்றவராக உள்ளதுடன் தமிழரசுக்கட்சியின் பங்காளியாக உள்ளார்.ஈபிடிபி சார்பு உறுப்பினர் தவநாதன் இம்முயற்சிக்கு ஆதரவை தெரிவிக்கவில்லை.
 



இந்நிலையினில் பொதுசன ஜக்கிய முன்னணி சார்பு உறுப்பினர்களை ஆதரவளிக்க மைத்திரி மூலம் சுமந்திரன் விடுத்த கோரிக்கையினையடுத்தே அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

 

இதனிடையே விமர்சனங்களை தாண்டி தமிழரான முதலமைச்சரினை பதவி கவிழ்க்க சிங்களவர்களது உதவியினை நாடிய தமிழரசுக்கட்சியின் செயற்பாடு பங்காளிக்கட்சிகளிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இதன் எதிர்வினைகள் அடுத்துவரும் நாட்களினில் வெளித்தெரியுமென சொல்லப்படுகின்றது.

Pathivu media 

  
« PREV
NEXT »

No comments