வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள வடமாகாண அமைச்சர்களை பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கோரியுள்ள நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் முதலமைச்சரிடம் கோரியுள்ளார்.
இந்நிலையிலேயே, வடமாகாண முதலமைச்சர் இல்லத்தில் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment