Latest News

June 07, 2017

இரு அமைச்சர்கள் விவகாரம்! கடும் நெருக்கடியில் வடக்கு முதலமைச்சர்
by admin - 0

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின்அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவிவிலக வேண்டும் என்று ஊழல், மோசடி தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்த போதும் அந்த இருஅமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை என்று வடக்கு மாகாணசபை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதலமைச்சருக்கு நெருக்கடிஅதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீதும் வடக்கு மாகாண கல்விஅமைச்சர் த.குருகுலராஜா மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்த முதலமைச்சரின் குழு, அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் பலவற்றில்அவர்களை குற்றவாளிகளாகக் கண்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் பதவிவிலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.


அந்த அறிக்கை கடந்த சனிக்கிழமை முதலமைச்சரால் அமைச்சர்களுக்குஅனுப்பிவைக்கப்பட்டது. அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய விடயங்கள் சிலகசிந்த நிலையில் அவற்றை ஊடகங்கள் வெளியிட்டன. இதனையடுத்து முதலமைச்சருக்குநெருக்கீடுகள் வராத வகையில் அமைச்சர்கள் இருவரும் உடனடியாகப் பதவிவிலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் இருந்தது. 

ஆனால்,அமைச்சர்கள் இருவரும் உடனடியாகப் பதவி விலகுவதற்கான சாத்தியங்களோ, ஏற்பாடுகளோதென்படவில்லை என்று மாகாண சபை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.அமைச்சர்களின் இந்த நிலைப்பாடு வடக்கு மாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல்அவதானிகள் எடுத்துக்காட்டுகின்றனர். 

விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில்அமைச்சர்கள் இருவரும் பதவி விலகவேண்டும் என்று சரமாரியாகக் கருத்துகள்பகிரப்பட்டு வருகின்றன. அவர்களைப் பதவியிலிருந்து முதலமைச்சர் நீக்கவேண்டும்என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

இத்தகையதொரு நிலையில் முதலமைச்சர் மீது அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் என்றுஅவதானிகள் கூறுகின்றனர்.

« PREV
NEXT »

No comments