சந்தேக நபர்கள் அணிவகுப்பில் அடையாளம் காணப்படவில்லை
திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர்கள் அடையாளம் காட்டப்படவில்லை.
இருந்த போதிலும் அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிவான் ஐ.என்.ரிஸ்வான் உத்தரவிட் டுள்ளார்.
மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று காலை அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிக ளும் அடையாள அணிவகுப்பில் கலந்து கொண்டபோதிலும் அவர்கள் சந்தேக நபர் கள் எவரையும் அடையாளம் காட்டவில்லை.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஐ.என். றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
மூதூர் பெருவெளி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவிகள் மூன்று பேரை குறித்த பகுதியில் தொழில்புரிந்துக் கொண்டிருந்த சிலர் துஷ்பிரயோகத்தற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் விசாரணைகளின் பின்னர் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. சிறுமிகள் சார்பில் நான்கு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜாராகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நீதியான விசாரணை கோரி இரால்குழி, மற்றும் மூதூர் மல்லிகைத்தீவுசந்தி போன்ற இடங்களில் வேறுவேறாக கவன ஈர்ப்பு போராட்டத்தை பொதுமக்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர். மல்லிகைத்தீவு சந்தியில் சில இளைஞர்கள் வீதிமறிப்பிலும் ஈடுபட்டதனால் சற்று குழப்பநிலைமை காணப்பட்டது.
No comments
Post a Comment