London Bridge லண்டன் பாலத்தில் சற்றுமுன் வாகனம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நடைபயணம் செய்த மக்கள் பலர் காயமடைந்துள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் .
அத்துடன் கத்தி மூலமும் பயணம் செய்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அறிய வருகிறது.
பித்திய தகவல்படி 12 இஞ்சி பிளேட் மற்றும் துப்பாக்கி கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அறியவருகிறது,
மக்கள் லண்டன் பாலத்தின் பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்
இந்த சம்பவத்தால் அந்த பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மாற்று வழிப்பாதையில் செல்லுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தீவிரவாதிகளின் செயலாக இருக்ககூடுமோ என்று அஞ்சப்படுகிறது.
இதே இடத்தில் கார் (மகிழுந்து) மூலம் முன்னர் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது .
No comments
Post a Comment