Latest News

June 19, 2017

லண்டனில் சிறிய வாகனம் கொண்டு தாக்குதல் ஒருவர் பலி
by admin - 0

 

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது. 

இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு அவசர சிகிச்சை பிரிவு சென்றுள்ளது. தாக்குதல் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Seven Sisters வீதியின் ஒரு பகுதி தற்போது விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மசூதியில் ரமழான் நோன்பு துறக்கும் வேளையில் இந்த வெள்ளை நிற வாகனம் பாதசாரிகள் மீது பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெருமளவு முஸ்லிம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

 
« PREV
NEXT »

No comments