முன்னாள் அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் உள்ளிட்ட இருவரும் சில நிபந்தனைகளிற்கு உட்பட்டால் அமைச்சர்களாக இருக்கலாம்.அவர்கள் மீது கிடைக்கப்பெற்றுள்ள முன்னைய மற்றும் புதிய முறைப்பாடுகள் தொடர்பினில் நடைபெறவுள்ள விசாரணைகளினை தடுக்கும் வகையினில் அவர்கள் செயற்படுவார்கள் என்பது தெரியும்.அதனால் தான் அவர்களினை விடுமுறையினில் செல்ல பணித்திருந்தேன்.தற்போது தமிழரசுக்கட்சி கோருவது போன்று அவர்கள் இருவரும் அமைச்சர்களாக தொடர்வதாயின் விதித்த நிபந்தனைகள் தொடர்பினில் சம்மதம் தெரிவித்தால் பேசமுடியுமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாளைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பினை குழப்பியடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே சமரசப்பேச்சு நடந்ததாக செய்திகளை கட்சி ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன.அத்துடன் முதல்வருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதெனவும் பொய் தகவல்கள் கசியவிடப்பட்டு வருகின்றது.
இதனிடையே வடக்கில் நாளை வெள்ளிக்கிழமை 16ம் திகதி முழு அடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்புவிடுத்துள்ள நிலையினில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.அதே போன்று பல தரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்திவருகின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான கபட நாடகங்களுக்கு எமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வெள்ளிக்கிழமை பொது கடையடைப்பு ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுக்கின்றது. குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென நாம் விநயமுடன் வேண்டுகிறோம்” என தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
No comments
Post a Comment