வடமராட்சியில் முன்னாள் வேட்பாளர் புவனேந்திராஜா கஜன் குடும்பத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
வடமராட்சி பிரதேசத்தில் வடமாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட புவனேந்திராஜா கஜன் குடும்பத்தினருக்கு இராணுவபுலனாய்வு பிரிவு ஆயுததாரிகளின் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடியில் உள்ள வீட்டுக்கு சென்ற இராணுவ புலனாய்வு பிரிவினார் குறித்த முன்னாள் வேட்பாளர் தொடர்பாக குடும்பத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.
புலம்பெயர் நாடு ஒன்றில் வாசித்துவரும் குறித்த நபர் இலங்கை அரசுக்கு எதிராக பல வேலைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதுடன் தமிழ் அரசியல் கட்சி மற்றும் யாழ் மனித உரிமை ஆனைக்குழு ஆகியவற்றிளும் முறைபாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசங்கத்தின் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல் தொடர்வது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment