மஹிந்த அரசின் பங்காளியாகவும் இறுதி யுத்த காலத்தினில் பதில் ஜனாதிபதியுமாக இருந்த மைத்திரி வறுமை ஒழிப்பென்ற பேரினில் ஏன் முல்லைதீவுக்கு மே18 ம் திகதி வருகின்றார் என்பது எமக்கு தெரியும்.
திருகோணமலையினில் அமிர்தலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச மக்கள் போராட்டங்களால் எவ்வாறு கடல்வழியாக இந்திய அமைதிப்படையுடன் தப்பி பேர்னாரோ அதே போன்றே மைத்திரியும் இம்முறை முல்லைதீவிலிருந்து போகவேண்டிவருமென எச்சரித்துள்ளனர் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்,பசுபதிப்பிள்ளை மற்றும் எம்.தியாகராசா.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை அவர்கள் நடத்திய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் தெரிவிக்கையினில் மே 18 கூட்டு இனஅழிப்பின் நினைவேந்தல் நாள்.அன்றைய நாளை மலினப்படுத்துவதற்காக கோடிகளை கொட்டிக்கொடுத்து எவர் வந்தாலும் விரட்டியே அடிப்போம். அது மைத்திரியாகவோ அல்லது வெளிநாட்டு தலைவர்களாகவோ இருக்கலாம்.முல்லைதீவு வறுமை மாவட்டமாக இரண்டு வருடங்களிற்கு முன்னராக அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்நிலையினில் இரண்டுவரும் கடந்து அதுவும் மே 18 அன்று தான் ஆட்சியாளர்கள் வறுமை ஒழிப்பு அறிவிக்க முல்லைதீவு வர திட்டமிட்டுள்ளமை உள்நோக்கம் கொண்டதொன்றே.இதனால் நாம் நிச்சயம் அதனை எதிர்ப்போம்.
மே18 அன்று திட்டமிட்டபடி வடமாகாண முதலமைச்சர் தலைமையினில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும்.அதனை மலினப்படுத்தும் வகையினில் மைத்திரி வருவரானால் முல்லைதீவு மாவட்ட செயலகம் முற்றுகைக்குள்ளாகும்.
பலரும் கோருவது போல இலங்கை ஜனாதிபதி தனது முல்லைதீவுக்கான தனது வருகையை மே 18ம் திகதியை பிற்போடவேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
No comments
Post a Comment