காங்கேசன்துறையில் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருந்த கிணற்றுக்கு அண்மையில், இராணுவத்தினரால் பொதுமகனிடம் இருந்து வலுக் கட்டாயமாக பறித்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடு ஒன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை வடக்கு குரு வீதி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான கிணறு ஒன்றில் இருந்து பழைய மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மோட் டார் சைக்கிள் பாகங்கள் சிலவும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.
அந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் மோட்டார்சைக்கிள் ஒன்றின் இலக்கத்தகடு (NP MA 1888) ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த இலக்கத்தகடுக்குரிய உரிமையாளர் தற்போது இணுவில் பகுதியில் வசித்து வருகிறார்.
அவரிடம் சென்று விசாரித்த போது குறி த்த மோட்டார் சைக்கிளை கடந்த 2006ஆம் ஆண்டளவில் வேறு ஒரு நபருக்கு விற்று விட்டதாக தெரிவித்ததுடன் அந்த நபருடைய விபரங்களையும் தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்ட விபரங்களை வைத்து மோட்டார் சைக்கிளை வாங்கிய நபரை தேடி அவரிடம் விபரங்களை கேட்ட போது, கடந்த 2007ஆம் ஆண்டில் இராணுவத்தினர் தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக அந்த மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர் என தெரிவித்தார்.
No comments
Post a Comment