இலங்கை நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 126ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று (28) காலை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது என அறிவித்துள்ள அந்நிலையம், 97 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 51 பேர் இரத்தினபுரியிலும் 43 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 8 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.
இந்த அனர்த்தங்கள் காரணமாக, 109,773 குடும்பங்களைச் சேர்ந்த 423,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 203 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,627 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.
No comments
Post a Comment