தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை...
ஆண்டுதோறும் மே 17, 18, 19 ஆகிய நாட்களில் தமிழகமெங்கும் குறிப்பாக, சென்னை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தமிழர்கள் கடைப்பிடித்து கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவது வழக்கமாகும்.
இவ்வாண்டு, இந்நாளை சென்னை கடற்கரையில் கடைப்பிடித்ததற்காக மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மற்றும் மூவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சமூக விரோதிகளின் மீது ஏவப்பட வேண்டிய குண்டர் சட்டத்தைப் பொதுநலத் தொண்டர்களுக்கெதிராகத் தமிழக அரசு பயன்படுத்தியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உடனடியாக அவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்
No comments
Post a Comment