•ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தால் குண்டர் சட்டமா?
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செய்ய முயன்ற திருமுருகன் காந்தி உட்பட நாலு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
பயங்கர ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தியிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதம் மெழுகுவர்த்தி மட்டுமே.
முழுகுவர்த்தி வைத்திருந்தவர் மீது தமிழக அரசும் அதன் காவல்துறையும் பயங்கர குண்டர் சட்டம் போட்டுள்ளது.
அஞ்சலி செய்ய வந்தவர்களை கைது செய்ததே தவறு. அதுவும் அவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டிருப்பது அதைவிட தவுறு.
ஒரு அரசும் அதன் காவல்துறையும் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்து குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைக்கலாம் என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கின்றது.
அமைதியாக அஞ்சலி செலுத்த வந்தவர்கள்;மீது வன்முறையை பிரயோகித்தது தமிழக காவல்துறை.
அமைதியாக அஞ்சலி செலுத்த வந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை.
அமைதியாக அஞ்சலி செலுத்த வந்தவர்களை சிறையில் அடைத்தது மட்டுமன்றி ஒரு வருடம் வெளியே வராமல் இருப்பதற்கு குண்டர் சட்டம் போட்டது தமிழக காவல்துறை.
கடந்த ஏழு வருடத்தில் ஆறு தடவை ஜ.நா சென்று ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக தனது குரலை பதிவு செய்துள்ளார் திருமுருகன்காந்தி.
திருமுருகன் காந்தி பிரிவினை கோரவில்லை. ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. இந்திய அரசியல் அமைப்பு வழங்கிய அங்கீகாரத்தின்படி சாத்வீக வழியில் குரல் கொடுத்துள்ளார்.
இருந்தும் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார் எனில் அதன் அர்த்தம் என்ன?
அகிம்சை வழியில் போராடினால் அரசு வன்முறையை பாவித்து அடக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு- ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் திருமுருகன் காந்திக்காக இதுவரை ஒரு ஈழத் தலைவர்கூட குரல் கொடுக்காதது வேதனையாக உள்ளது.
No comments
Post a Comment