12-05-2017
இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேணடு ம்
எதிர்வரும் மே 18ஆம் நாள் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 8ஆவதுஆண்டுநினைவுநாளாகும்.இவ்இனவழிப்புநாளைநினைவுகூரவேணடியதுஅனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும்.
ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தச் சட்டத்தையும் அதன் கீழான மாகாண சபை முறையும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வாக திணிக்க முற்பட்டபோது, மேற்படி மாகாண சபை முறையை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாதென்பது மட்டுமல்ல, தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருகக் முடியாதென உறுதிபட நிராகரித்த தமிழ் மக்கள் அதற்கெதிராக அதிஉச்ச தியாகங்களைச் செய்து போராடியுள்ளனர். அவ் உச்சக்கட்ட தியாகங்களின் இறுதி அங்கமேமுள்ளிவாய்கக்hல்பேரவலாகும்.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளககூ;டியதீர்வைமுன்னிறுத்திகட்சி,அமைப்புபேதமினற்pஅனைத்துதரப்பினரையும் முழுத் தமிழர் தாயகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகினற் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுதல் சாலச் சிறநத் து என்று நாங்கள் கருதுகின்றோம்.
எனவே இவ் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமையேற்று அனைத்துத் தமிழ் மக்களையும் ஒருங்கிணைத்து நினைவு கூர வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழ் மக்கள் பேரவையின் கைகளில் உளள்து.அந்தவகையில்தனதுவரலாற்றுக்கடமையினைஉணர்ந்துமேற்படிஇனவழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வை த.ம.பேரவையானது தலைமையேற்று முன்னெடுக்க வேணடும் என்ற கோரிக்கையை அதன் அங்கத்துவ அமைப்பு என்ற அடிப்படையில் மிகவும் உரிமையுடன் விடுக்கின்றோம். கௌரவ சி.வி விக்னேஸ்வரன் ஐயா உள்ளிட்ட இணைத் தலைவர்கள் தலைமையில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அந் நிகழ்வை உணர்வு பூர்வமாக நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை அர்ப்பணித்து செயற்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாகாண சபை முறையினை ஏற்கமறுத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் போரட்டத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் தியாகங்களையும் நினைவுகூருகினற் நினைவேந்தல் நிகழ்வை அப்போராட்டம்அழிக்கப்பட்டபின்னர்உருவாகக்ப்பட்ட வடக்குமாகாணசபையூடாக மேற்கொளவ்து என்பது இதுவரை காலமும் தமிழ் மக்கள் செய்த தியாகங்களையும், சந்தித்த இழப்புக்களையும் கொச்சைப்படுத்தும் என்பதால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடமாகாண சபை முன்னெடுக்கும் எத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்தும் தவிர்க்க முடியாதவாறு விலகியே நிற்கும் என்பதை அறியத்தருகின்றோம்.
தமிழ் மக்கள் பேரவையினால் இந்நிகழ்வை தலைமையேற்று ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலைகள் இருப்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்படி நினைவேந்தல் நிகழ்வை தனித்து முன்னெடுக்கும் என்பதனை அறியத்தருகின்றோம்.
நன்றி
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
No comments
Post a Comment