முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் தொடக்க நாள் அனுஷ்டிப்பு!
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் 2009ம் ஆண்டு இனப்படுகொலை வாரத்தின் தொடக்க நாள் இன்றைய தினம் யாழ் நாவற்குழி – செம்மணி படுகொலை இடம்பெற்ற இடத்தில் ஆரம்பமாகியுள்ளது.2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கான நினைவு நாள் மே-18ம் திகதி நினைவேந்தப்படுகிறது.
இந்த நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாளான இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு செம்மணி படுகொலை இடம்பெற்ற பகுதியில் மக்கள் ஈகை சுடரேற்றி கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.இதில் அரசியல் தலைவர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்த நினைவு நாள் தொடர்ந்து நாளைய தினம் வடமராட்சி கிழக்கிலும், அடுத்து நெடுந்தீவு குமுதினி படுகொலை இடம்பெற்ற பகுதியிலும் தொடர்ந்து 18ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
No comments
Post a Comment