கனடாவில் அகதி அந்தஸ்த்துப் பெற்று நிரந்தர குடியுரிமை பெற்ற அனைவரையும் கனேடிய பிரஜைகளாக கருத வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் (Nisreen Ahamed Mohamed Nilam) (36) 2008ம் ஆண்டு கனடா சென்று, 2011ம் ஆண்டு அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார். இதேவேளை, அவர் 2010ம் ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இரண்டு தடவைகள் இலங்கை சென்று பாதுகாப்பாக நாடு திருப்பியமையால், அவருக்கு எந்தவித அச்சுறுத்தலும் அங்கு இல்லை என்ற நிலைப்பாட்டை கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு கனடாவின் முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய அகதிகள் சட்டத்திருத்தங்களின் அடிப்படையில், அவரது குடியுரிமையை பறித்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. நிரந்தர குடியுரிமை பெறுகின்ற அகதிகள், கனடாவின் பிரஜைகளுக்கு ஒப்பாகவே நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மீளாய்வை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளவிருப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அகதி அந்தஸ்து கேட்டு பின்பு பிரஜாஉரிமை எடுத்து இலங்கை சுற்றுலாவுக்காக சென்று திரும்பும் தமிழர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக கருதப்படுகின்றது
No comments
Post a Comment