இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அதிகாலை 3:30 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட பளை பொலீசார் மீது பளை கச்சாய் வேலி பகுதியில் பொலீசாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது
இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது
வீதி ரோந்து சென்ற பொலீசாரின் வாகனம் சிறு சேதமடைந்த தோடு இரு பொலிசாரும் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்திற்கு T56ரகக் துப்பாக்கியை பயன்படுத்தி சூடப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலைகாணப்படுகிறது
No comments
Post a Comment