Latest News

April 21, 2017

நிதியை வழங்­கினால் காணி­களை இரா­ணுவம் விடு­விக்கத் தயார்-சுமந்திரன்
by admin - 0

இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள காணிகள் தொடர்­பான கூட்டம் சாத­க­மாக சுமுக­மான முறையில் இடம்­பெற்­றது. இரா­ணு­வத்­தி­னரும் மக்­களின் காணி­களை படிப்­ப­டி­யாக விடு­விக்கும் நோக்­க­த்தோடு செயற்­ப­டு­வ­தாக தெரி­கி­றது.

ஆகவே இப்­ப­டி­யான கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் நாங்கள் முன்­ந­க­ரும்­போது படிப்­ப­டி­யாக காணிகள் விடு­விக்­கப்­படும் என்றும் தென்­ப­டு­கி­றது என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான எம்ஏ. சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

 கிளி­நொச்சி மாவட்­டத்தில் முப்­ப­டை­களின் கட்­டுப்­பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்­க­ளங்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை விடு­வித்தல் தொடர்­பி­லான உயர்­மட்ட கலந்­து­ரை­யாடல் நேற்று வியா­ழக்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. கூட்­டத்தின் நிறைவில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,  இரா­ணு­வ­னத்­தினர் தனியார் காணி­களை விடுப்­ப­துதான் தங்­க­ளது முதல் நோக்கம் என தீர்­மா­னித்து அறி­வித்­தி­ருக்­கின்­றார்கள். கிளி­நொச்சி மாவட்­டத்­திலே இருக்­கின்ற ஒரே­யொரு பிரச்­சினை அடை­யாளம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது பல காணி­களை அரச அதி­கா­ரிகள் தனியார் காணிகள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தி­யதை இரா­ணு­வத்­தினர் அரச காணிகள் என்று நினைத்­தி­ருக்­கின்­றார்கள்.  

 காரணம் காணி சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­கி­யி­ருக்­கி­றது. ஆனால் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. ஆரம்­ப­மா­கி­ய­வு­டனே அது அரச காணி என்று அவர்கள் நினைத்­து­விட்­டார்கள். அது பற்றி கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது நாங்கள் விளக்கம் கொடுத்த பின்னர் அந்தக் காணி­களை தனியார் காணிகள் என்று உறு­திப்­ப­டுத்­தினால் அவற்றை விடு­விப்­ப­தா­கவும் நட­வ­டிக்­கையை எடுப்­ப­தா­கவும் கூறி­யுள்­ளனர்.

 அதை­விட அரச காணி­க­ளிலும் கூட பொது மக்­களின் தேவைக்­காக இருக்­கின்ற பல பிர­தே­சங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டன. அவர்கள் ஒரு இடத்தில் கட்­ட­டங்கள் அமைத்து இருக்­கின்ற நிலையில் இன்­னொரு இடத்­திற்கு மாறு­கின்ற போது கட்­ட­டங்கள் அமைத்த செல­வுகள் உண்டு. அர­சாங்கம் அந்த செல­வு­களை வழங்­கு­கின்ற பட்­சத்தில் தாங்கள் உட­ன­டி­யாக அந்த இடங்­களை விட்டு செல்­லலாம் என்று கூறு­கின்­றனர்.

 கடந்த தினங்­க­ளிலும் அதற்கு முன்­னரும் நடத்­திய கலந்­து­ரை­யா­டலில் இருந்து இது இப்­போது புல­னா­கி­றது. இரா­ணுவம் ஓரி­டத்தில் இருந்­தது. இன்னோர் இடத்­திற்கு மாறு­கின்ற போது அதன் செலவு பெரி­ய­தொரு தடை­யாக இருக்­கி­றது. ஆகவே நாங்கள் இது குறித்தும் அர­சாங்­கத்­தோடு பேசி ஏதோ ஒரு வித­மாக நல்­லி­ணக்­கத்தின் ஒரு படி­மு­றை­யாக எங்­கே­யா­வது இருந்து பணத்தை பெற்­று­கொ­டுத்தால் கூட இரா­ணுவம் இடங்­களை விடு­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றார்கள் எனவே அந்த நட­வ­டிக்­கை­ளையும் நாங்கள் தொடர்ச்­சி­யாக எடுப்போம்.

 இர­ணை­ம­டுவை சுற்­றி­யுள்ள 2ஆயி­ரத்து 439 ஏக்கர் நிலத்தை விடு­விப்­ப­தாக சொன்­னார்கள். அது முல்­லைத்­தீவு மாவட்டம் என்­பதால் கிளி­நொச்சி கூட்­டத்தில் அதனை பேச­வில்லை. ஆனால் அந்தக் காணிகள் அவர்­க­ளு­டைய கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தாக அறி­வித்­தார்கள். அதனை தவிர உறு­தி­யாக இப்­போது எனக்கு சரி­யான தக­வல்கள் சொல்ல முடி­யாது. இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் 24 ஆயிரம் ஏக்கர் காணிகள் இருந்­த­தா­கவும் ஆனால் தற்­போது 783 ஏக்­கர்தான் தங்­களின் கட்­டுப்­பாட்டில் இருப்­பா­கவும் அதை படி­ப­டி­யாக தாங்கள் விடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டார்கள்.அண்­ண­ள­வாக நூறு ஏக்கர் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­படக் கூடிய நிலையில் இருக்கிறது என்றார்.

 இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறிதரன். மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சமந்தி வீரசிங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »

No comments