Latest News

April 13, 2017

பதவி விலகுவது புதிய விடயமல்ல
by Editor - 0

மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக பத­வி­வி­ல­கு­வது என்­பது எனக்கு புதிய விட­ய­மல்ல. அது பழைய விட­ய­மாகும். இதற்கு முன்­னரும் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக பதவிவிலகும் சூழல் வந்­த­போது முதலில் பதவி வில­கி­யவன் நான்தான் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

எனினும் தற்­போது தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான  சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக பக்­கு­வ­மாக செயற்­ப­ட­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சுட்­டிக்­காட்­டினார்.  

இதே­வேளை காணி­களை இழந்­துள்ள மக்­களின் உணர்­வு­களை நாம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அவற்றை நாம் உதா­சீனம் செய்­யக்­கூ­டாது. மக்­களின் காணி­களை மீளப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தற்­போ­து­கூட ( நேற்­றுக்­காலை) 10 தொலை­பேசி அழைப்­புக்­களை ஏற்­ப­டுத்தி கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுத்தேன். நாங்கள் அந்த மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக தொடர்ந்தும் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம் என்றும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் குறிப்­பிட்டார்.

எமக்கு உரிய தீர்வை பெற்­றுத்­தர முடி­யா­விட்டால் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் உட்­பட அனைத்து தமிழ் தேசிய கூட்ட்­ட­மைப்பின் அர­சியல் தலை­வர்­களும் தங்­களின் பத­வி­களை துறந்­து­விட்டு எம்­மோடு வீதியில் இருந்து போராட வர­வேண்டும் என கேப்­பா­பி­லவு பூர்­வீக கிராம மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே எதிர்க்­கட்சித் தலைவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

காணி­களை இழந்­துள்ள மக்­களின் பிரச்­சி­னை­களை நாம் புரிந்­து­கொண்­டுள்ளோம். அந்த மக்­களின் பிரச்­சி­னைகள் விரை­வாக தீர்க்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கான ஒழுங்­கு­களை நாங்கள் செய்­த­வண்­ணமே இருக்­கின்றோம். மக்­களின் கஷ்­டங்­களை நாங்கள் புரிந்­து­கொண்­டுள்ளோம். அவற்றை யாரும் உதா­சீனம் செய்­யக்­கூ­டாது.

 பாதிக்­கப்­பட்ட மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­ள­வேண்டும். தமது காணி­களை பெற முடி­ய­வில்­லையெ என்ற வருத்­தத்தில் மக்கள் உள்­ளனர். அவர்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­ள­வேண்டும். எனவே அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து அவர்­களின் காணி­களை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அந்­த­வ­கையில் அதற்­கான ஏற்­பா­டு­களை செய்­த­வண்­ணமே இருக்­கின்றோம்.

மக்­களின் காணி­களை மீளப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தற்­போ­து­கூட ( நேற்­றுக்­காலை) 10 தொலை­பேசி அழைப்­புக்­களை ஏற்­ப­டுத்தி கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுத்தேன். நாங்கள் அந்த மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக தொடர்ந்தும் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம்.

இந்த இடத்தில் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­காக பத­வி­வி­ல­கு­வது என்­பது எனக்கு புதிய விட­ய­மல்ல. அது பழைய விட­ய­மாகும். இதற்கு முன்­னரும் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக பதவி விலகும் சூழல் வந்­த­போது முதலில் பதவி வில­கி­யவன் நான்தான் என்­ப­தனை கூற­வேண்டும். எனவே பதவி வில­கு­வது என்­பது இங்கு பெரிய விட­ய­மல்ல. ஆனால் ஒரு யதார்த்­த­மான விட­யத்தை நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

நாங்கள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யல்ல. அர­சாங்­கத்தில் எவ்­வி­த­மான பத­வி­க­ளையும் நாங்கள் வகிக்­க­வு­மில்லை.

 ஆனால் முதல் தட­வை­யாக தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதனை யாரும் மறுக்க முடி­யாது. எப்­போ­து­மில்­லா­த­வா­றான ஒரு சந்­தர்ப்பம் எமக்கு கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக பக்­கு­வ­மாக செயற்­ப­ட­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை நாங்கள் ஒரு­போதும் உதா­சீனம் செய்­யக்­கூ­டாது.

அதா­வது எம்­மிடம் ஆட்சி அதி­காரம் மற்றும் அரச அதி­கா­ரங்கள் இல்­லா­மையின் கார­ண­மா­கவே எமது பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாமல் இருக்­கின்றோம். எமக்கு அவ்­வா­றான அதி­கா­ரங்கள் கிடைத்தால் மீள்­கு­டி­யேற்றம் சட்டம் ஒழுங்கு மனித உரிமை போன்­ற­வற்றை கையாள முடியும். இதற்கு அர­சியல் தீர்வு மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

எனவே தற்­போது கிடைத்­துள்ள அரு­மை­யான சந்­தர்ப்­பத்தை உரிய முறையில் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக பக்­கு­வ­மாக செயற்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. அதா­வது தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தின் ஊடாக உரிய அர­சியல் தீர்வு கிடைக்­குமா இல்­லையா என்­பது எமக்குத் தெரி­யாது. அது கட­வு­ளுக்­குத்தான் தெரியும்.

ஆனால் எமக்கு தற்­போது கிடைத்­துள்ள சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி பய­ணிக்­க­வேண்டும். அந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­தாமல் இருக்க முடி­யாது. அந்தப் பயணத்தை பக்குவமாக முன்னெடுக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் இந்த விடயங்களை குழப்பி விடுவதற்கு சிலர் முயற்சித்துக்கொண்டிருக்கின்றமையை நாங்கள் அறிகின்றோம். ஆனால் நாங்கள் தூரநோக்குடன் பயணிக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது.

மறுபுறம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டேயிருக்கின்றோம். காணிகளை இழந்துள்ள மக்கள் அவற்றை மீளப்பெற்றுக்கொள்ளும்வரை நாங்கள் தேவையான ஒழுங்குகளை முன்னேடுத்த வண்ணமே இருப்போம் என்றார்
« PREV
NEXT »

No comments