பொட்டு அம்மான் இன்னமும் வன்னியில் ஒழிந்திருக்கத்தான் வேண்டும்-முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கபில ஹெந்தாவிதாரன
அவர் மேலும் கூறுகையில்,
பொட்டு அம்மான் மட்டுமன்றி போர் முடிவடைந்ததன் பின்னர் பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக கூறினார்கள்.
போர் முடிய முன்னதாகவே பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார் என சிலர் கூறினார்கள்.
புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் மக்களிடம் பணம் திரட்டும் நபர்களே இதன் ஊடாக நன்மை ஈட்ட முயற்சிக்கின்றனர்.
எமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நந்திகடல் பகுதியில் 450 புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்திய வேளையில் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரின் தாக்குதல்களின் போது இந்த 450 புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் குழுவில் பொட்டு அம்மானும் உள்ளடங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நாம் பொட்டு அம்மானின் சடலத்தை அடையாளம் காணவில்லை. மேலும் இராணுவப் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு அதே தினத்தில் ஒர் நோயாளர் காவு வண்டி வந்ததாகவும் அந்த வண்டி வெடித்துச் சிதறியதாகவும் அதில் ஒர் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த சடலம் பொட்டு அம்மானினது என்றே கூறப்படுகின்றது.
கடல் வழியாக தப்பிச் செல்லவும் அந்த சந்தர்ப்பத்தில் வாய்ப்பு இருக்கவில்லை. கடற்படையினர் முல்லைத்தீவு கடற்பரப்பினை சுற்றி வளைத்திருந்தனர்.
அவ்வாறு இல்லையென்றால் பொட்டு அம்மான் இன்னமும் வன்னியில் ஒழிந்திருக்கத்தான் வேண்டும். இறுதியில் இவ்வாறான கதைகளின் ஊடாக நன்மை பெற்றுக்கொள்வது புலி ஆதரவாளர்கள் மட்டுமேயாகும்.
புலி ஆதரவு புலம்பெயர் சமூகமேயாகும்.இவ்வாறு கதைகளைக் கூறி மேலும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என கபில ஹெந்தாவிதாரன தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் இலங்கையில் உள்ளதாக சிங்கள ஊடகம் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார்.
கடந்த வாரம் மீனவ படகு ஒன்றின் ஊடாக மன்னார் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது இந்தியாவுக்கு சென்றிருந்த ஜெயந்தன், அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.
அவரது மனைவியும் இறுதி செயற்பாட்டின் போது இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர் தற்போது பிள்ளைகளுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினருக்கு பலத்த எதிர்ப்பை காட்டிய படையணிகளில் ஜெயந்தன் தலைமையிலான படையணி முக்கியமானதாகும்.
ஜெயந்தன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஊடாக மன்னாருக்கு வந்து சென்றுள்ளார். இதன்போது மன்னாரில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகளின் ஒரு தொகை பணத்தையும் கொண்டு சென்றுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஜெயந்தன் என்பது விடுதலைப் புலிகளினால் அவருக்கு வழங்கப்பட்ட பெயராகும். இந்நிலையில் அவரது உண்மையான பெயர் மோகனதாஸ் என்பதனை இந்த நாட்களில் பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்தனின் சகோதரி ஒருவர் இந்தியாவின் பெங்களூர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அவரது மகனின் திருமணத்திற்காக லண்டனில் இருந்து ஜெயந்தன் பணம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணைக்கு மத்தியில் தற்போது வரையில் புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமையினால் ஜெயந்தனின் வருகை மற்றும் இவர் எதற்காக வருகை தந்துள்ளார் என்பது தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைக்கவில்லை என திவயின மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments
Post a Comment