Latest News

April 06, 2017

ஆர்கே நகரில் இளைஞர்களின் வாக்குகளை அள்ளும் நாம் தமிழர்
by admin - 0

 

சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா ஒருபக்கம் களைகட்டிக் கொண்டிருக்கிறது... இந்த பணப் பாய்ச்சலுக்கு மத்தியில் நீந்தி கரை சேரமுடியாவிட்டாலும் கவுரமாக கரை ஒதுங்க முடியுமா என தத்தளித்துக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துப் போட்டி என்ற முழக்கத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகிறார் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னம் கொடுக்க வேண்டும் என தேர்தல் சீர்திருத்தத்தையும் சீமான் வலியுறுத்தி வருகிறார்.


நாம் தமிழர் தனித்தே போட்டி

இருந்தபோதும் கூட ஜனநாயகக் கடமைக்காக ஆர்கே நகர் தொகுதியில் தனித்தே போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டுதயத்தை வேட்பாளராக களமிறக்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.


வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

ஆர்கே நகர் தொகுதியில் அனைத்து தெருக்களிலும் நடந்தே சென்று வீடு வீடாக வாக்கு சேகரிக்கிறார் சீமான். அதேநேரத்தில் அதிமுக அணிகள், திமுக ஆகியவை பணத்தை வாரி இறைக்கும் அராஜகத்தையும் அரங்கேற்றி வருகின்றன.


இளைஞர்கள் வாக்கு இலக்கு

இருந்தபோதும் சீமான் தமது கட்சி நிர்வாகிகளிடத்தில், பெரிய கட்சிகள் அளவுக்கு நம்மால் பணம் செலவு செய்ய முடியாதுதான். குறைந்தபட்சம் நோட்டாவுக்கு போகிற வாக்குகளை தடுக்க முயற்சிக்கனும்; அதேபோல் தொகுதியில் இருக்கிற 70,000 இளைஞர்கள் வாக்குகளை கணிசமாக நம் பக்கம் இழுக்கனும். இதை செய்தாலே ஒரு கவுரவமான வாக்குகளை வாங்கிவிட முடியும் என கூறியுள்ளார்.


உற்சாகத்தில் நாம் தமிழர் நிர்வாகிகள்

அத்துடன் முக்கியமாக, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிஸ் கட்சிகளைவிட ஒரு வாக்காவது கூடுதலாக வாங்கிவிட வேண்டும். அப்போதுதான் நாம் மண்ணின் பிள்ளைகள்; மக்கள் எங்களுக்கே ஆதரவு என அவர்களை எதிர்த்து தொடர்ந்து பிரசாரம் செய்யவும் முடியும் என கறாராக கூறி வருகிறாராம் சீமான். அவரது பேச்சுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் கூடுதல் உற்சாகம் பிறந்துள்ளதாம்.

« PREV
NEXT »

No comments