வழமைபோல் இம்முறையும் தழிழர் ஓருங்கிணைப்புக்குழு- பிரித்தானியா பிரதமர் வாசல்தளத்திற்கு முன்பாக (No10, Downing Street, London. SW1A 2AA) மேற்படி நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளது.நிகழ்வுகள் பகல் 2.00 மணிக்கு தழிழீழ தேசியகொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது. ஒரு தேசிய இனத்தின் அடையாளங்கள் எப்போதும் முன்னிலைபடுத்தப்பட வேண்டும் அதில் இருந்து இந்த தழிழ் சழூகம் பிரிந்து நிற்கபோவதில்லை என்பதனை கடந்தவருடம் நிரூபித்திருந்த மக்கள் வெள்ளம் இம்முறையும் மீண்டும் அதை நிரூபிப்பார்கள் என அறியப்படும் அதேவேளை தழிழர் ஒருங்கிணை ப்புக்குழு வெகு சிறப்பாக ஒழுங்கமைத்தல்களை செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை வழமைபோல் மேற்படி நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அம்சமாக சிங்கள அரசினால் எம் இனம் திட்டமிட்டு இனவழிப்புச்செய்யப்பட்டது இந்த வேளையிலேயே பல்லாயிரக்கணக்கான தமிழ்த் தேசிய இன அப்பாவி மக்கள் சிங்கள அரசினால் மருத்துவ வசதிகள் தடை செய்யப்பட்டு குறிப்பாக குருதி இன்றி கொல்லப்பட்டனர். இன் நினைவாக, குருதிக்கொடை வழங்கல் நிகழ்வும் நடைபெறவுள்ளது
No comments
Post a Comment