இசையும் ஒருவித போராட்டவடிவமே என்பதையும், மனிதமனங்களை இலகுவாக அடையக் கூடிய கலைகளின் வழியே நமது போராட்ட நியாயங்களையும், மண் விடுதலையை தேவையினையும் மக்களிடம் கொண்டு செல்லமுடியும் என்று மனப்பூர்வமாக நம்பியவர் நமது தேசியத்தலைவர் அவர்கள்.

அதன் காரணமாகவே போர்க்களத்தில் கவிஞர்களையும், பாடகர்களையும் போரின் ஆயுதமாக வளர்த்து, இனவிடுதலை பாடல்களை வார்த்து எடுத்தவர்.
அப்படி எமது தேசியத்தலைவரால் வளர்க்கப்பட்டு, வார்க்கப்பட்ட எடுத்த ஒரு சொத்துதான் எங்கள் ஈழத்து புரட்சி பாடகர் சாந்தன் அவர்கள். ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டு சென்ற ஈழத்தின் இசைக்குயில் எங்கள் சாந்தன்அவர்கள்.
அவரை இழந்து வாடும் விடுதலை களத்தில், அவரின் நினைவுகளை சுமந்து, கனவுகளை நோக்கி என்றும் வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய ராச்சியம் பயணிக்கும் என்பதை இந்நேரத்தில் உறுதி கூறுகிறது. அண்ணன் சாந்தன் அவர்களுக்கு தனது வீரவணக்கத்தை வீரத்தமிழர் முன்னணிஐக்கியராச்சியம் செலுத்துகிறது.
வீரத்தமிழர் முன்னணி ஐக்கியராச்சியம் (ஒருங்கிணைப்பு குழு)
No comments
Post a Comment