Latest News

March 21, 2017

ஸ்ரீலங்கா அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்று பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு
by admin - 0

பங்குனி 16,2017 அன்று பிரித்தானிய பிரதமர் மதிப்பிற்கு உரிய தரிசா மேயிடம் (Rt. Hon. Prime Minister Theresa May) ஸ்ரீலங்கா அரசுக்கு மேலும் கால அவகாம் கொடுக்கக் கூடாது என்றும் ஜ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறை வேற்றும்படி வலியுறுத்தி மனு ஒன்று கையளிக்கப்பட்டது.


தமிழீழ இளையோர்கள் செயற்பாட்டாளர்களான த.தயீசன்,  ந.கார்த்திக், யோ.சோபனா, அ.பவானி,  தர்ஷி அவர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூக நலன்களுக்ககான பிரதி அமைச்சர் மதிப்ரப்பிற்க்குரிய திரு சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களும் கலந்துகொண்டு இந்த மனுவை பிரதமர் இல்லத்தில் கையளித்தனர்.

சமகாலத்தில் ஜக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த மனுவில் ஸ்ரீலங்கா அரசுக்கு இனியும் கால அவகாசம் வழங்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட நாம் பலரின் ஆதரவுடன் வலியுறுத்தப் பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 26/02/2017 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் 23/03/2017  வரையில் அறவழிப் போராட்டம் ஒன்று பிரதமர் வாசல்த் தலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த வேளையில் பல ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கலந்துகொண்டு தமது ஆதரவையும் உணர்வையும் தெரிவித்து எமது மக்களுக்கு எதிராக நடந்த, நடந்துகொண்டு இருக்கும் இனச்சுத்திகரிப்பை நிறுத்தி சர்வதேச தலையீட்டுடன் நீதியும், தீர்வும் கேட்டு அறவாழிப் போராட்டம் தொடர்ந்தும் நடந்தவண்ணம் உள்ளது.





மேலும் அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் ஆட்சிக்கு வரும் எல்ல சிங்கள தலைவர்களும் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் முன் வைக்காமல் தமது ஆட்சிக்கலத்தில் எம்மை ஏமாற்றி ஆட்சி செய்ததே வரலாறு, அதன் பின்னர் ஆட்சிமாற்றம் வந்த பின்னர் அது புதிய அரசாங்கம் எனக் கூறி எல்லாவற்றையும் புதிதாக தொடங்குவார்கள்.

அதாவது 1948 ம் ஆண்டில் இருந்து எமது தமிழ் அரசியல் தலைவர்களை ஆட்சி மாறி வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றியது போல சமகாலத்தில் ஸ்ரீசேன அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகிறது மட்டுமல்ல அவர்கள் கொடுக்கும் எந்த வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப் படவில்லை இனியும் அவர்கள் அதை நிறைவேற்றப் போவதில்லை.

ஒன்று பட்ட தமிழ் மக்களின் உரிமைக் குரலே எமக்கான விடுதலையை நிலைநாட்டும், தமிழ் மக்களாகிய நாம் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு மேலும் எமது போராட்டத்தில் இணைந்து செயற்ப்பட வேண்டுமென தமிழீழ செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments