Latest News

February 10, 2017

இன்றைய தமிழ்நாடும் அரசியல் சூழ்ச்சிகளும்.! ஈழத்து துரோணர்.!!
by admin - 0

இன்றைய தமிழ்நாடும் 

அரசியல் சூழ்ச்சிகளும்.!

ஈழத்து துரோணர்.!!!
 
தமிழக முன்னாள் முதல்வர் "செல்வி ஜெயலலிதா" காலமானபின், தமிழ்நாட்டின் இன்றைய அரசியல், ஒரு "குழம்பிய குட்டை"போன்ற நிலையிலேயே உள்ளது.! 

இந்தக் குட்டையில் இந்தியாவின் தேசிய காட்சிகள் தொடங்கி, மாநிலக்கட்சிகளும் மீன்பிடிப்பதற்கு முயற்சி செய்கின்றன. இதில் BJP மோடியரசு முழுமூச்சில் காய்களை நகர்த்தி வருகின்றது. அடுத்ததாக திமுகவும் தனது பங்கிற்கு இறங்கி வேலைசெய்கின்றது. 

இதில் திரு.ஸ்டாலினின் நகர்வு அதிமுகாவை அழிப்பதுவல்ல, மாறாக பலவீனப்படுத்துவது மட்டுமேயாகும். கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேண்டும், ஆனால், அது பலகீனமுடைய திராவிடக் கடையாக இருக்கவேண்டும். அதிமுகாவை அழித்தால் "தமிழர் தேசிய அரசியல்" தலையெடுத்துவிடும் என்பதில் மோடியும், ஸ்டாலினும் ஒத்தகருத்திலேயே செயல்படுகின்றனர். 

ஆக, இவர்கள் அதிமுகாவை அழிக்கப்போவதில்லை, மாறாக அதை சிதைத்து பலவீனப்படுத்தவே, காய்களை நகர்த்துகின்றனர். 

சரி, இவர்கள் ஏன் சசிகலாவை அகற்ற நினைக்கின்றனர்? யார் இந்த சசிகலா? 

மன்னார்குடியில் ஒரு வீடியோக் கடை நடத்திய சாதாரண பெண்மணி.80களில் ஜெயலலிதா அவர்களின் தொடர்பு கிடைத்தபோது, இருவரும் சாதாரன நிலையிலேயே இருந்தனர். 

காலங்கள் கடந்தது, தமிழக முன்னாள் முதல்வர்  திரு. MGR மரணத்தின் பின், இதே அரசியல் குழப்பம் நிலவிய நேரம், இதே சசிகலாவும், அவரது கணவர் நடராசனும் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக நின்றனர் என்பதும் வரலாறு.! 

எப்படியோ ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பின்,புலியெதிர்ப்பு கோசத்துடன் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. ஆட்சியை பிடித்தது தான் தாமதம், ஜெயலலிதாவின் பின்னாலிருந்து அவரது ஆசியுடன் உலகில் உள்ள அனைத்து மோசடி வழிகளையும் பின்பற்றி, தமிழக மக்களின் பல்லாயிரம் கோடிகளை சுருட்டினர். 

ஆக, ஜெயா அவர்களின் பினாமியாக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று சாராய ஆலைகள், எஸ்ரேட்கள், திரையரங்குகள், பல்பொருள் அங்காடிகளென பல்லாயிரம் கோடிகள் சொத்து சேர்த்துவிட்டனர். 

இப்படி எல்லா வகையிலும் திமுக குடும்பத்தின் அரசியல் போலவே தான் சசிகலா குடும்பமும் உள்ளது.! (கருணாநிதியின் சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது சசிகலா குடும்பத்திடம் குறைவு தான்) 

ஆக, பாம்பின் கால் பாம்பறியும்.! 
அதனால் தான் ஸ்டாலினின் பதறல் ஊருக்கே கேட்கின்றது.! 

இது போலவே தான் பணபலமுள்ள சசிகலா, அதிகாரத்துக்கு வந்தால் ஹிந்து மதவாத கட்சியான BJP காலூன்ற முடியாதென்பது மோடியின் பயம். 
ஆனால், சசிகலா மோடியுடன் ஒத்துப்போகத் தயாராக இருந்த போதும், அதற்கான விட்டுக்கொடுப்புகள் சிலவற்றை செய்தபோதும், மோடியின்,சசிகலா மீதான சந்தேகம், பன்னீர்ப்பக்கமே செல்ல வைத்துள்ளது) 

இவர்கள் பன்னீர்செல்வத்தை கொண்டுவருவதற்கு ஏன் முன்னிக்கின்றனர்.? 

பன்னீர் அவர்களின் திடீர் கொந்தளிப்பின் பின்னால் உள்ள காரணம் என்ன? 

திரு.பன்னீர் செல்வம் சாதாரண நிலையிலிருந்து, இன்று முதல்வராக வருமளவுக்கு உயர்ந்ததன் பின்னால், அவர் போட்ட முதலீடு தன்னை ஜெயா அவர்களுக்கு அடிமையாக எண்ணி செயல்பட்டது மட்டுமேயாகும். 

இவரை பார்க்கும் போதெல்லாம் குனிந்தபடியே திரிவதை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். ஆனால் அந்த குனிவுக்கு பின்னால் அவர் சம்பாதித்ததோ பல்லாயிரம் கோடிகள்.! 

இவரது பணிவிற்கு பின்னால் உள்ள ஊழல் யார் கண்ணுக்கும் தெரியவில்லை அல்லது மறைக்கப்பட்டுள்ளது.! இவரது பினாமி சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த ரெய்ட் மூலம் பன்னீர்செல்லவத்தை வழிக்கு கொண்டுவந்தது மோடியரசு.! 

அவர்களுக்கு தேவை ஒரு கேட்பார் கைப்பிள்ளை.! பன்னீருக்கு தேவை பதவி+தான் சேர்த்த சொத்தை பாதுகாப்பது மட்டுமேயாகும். அவரைப்பொறுத்தவரை, தான் விழும் கால் யாருடையதென்பது அவருக்கு முக்கியமில்லை.! 

ஆக, மிகுதி நாலு ஆண்டுகளும் முதல்வராக ஆளவேண்டும். அதன் பின் தன்னால் முதலைவராக முடியாதென்பது அவருக்கே தெரியும்.! 

சசிகலா விட்ட, மிகப்பெரும் தவறு ஜெயலலிதா அவர்களின் சிகிச்சையையும், அவரது மரணத்தையும் மறைத்ததேயாகும். இன்று அவரது முதல்வர் கனவுக்கு எதிராக உள்ளதும் இந்தக்காரணமேயாகும்.!

சசிகலா மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச்சாட்டு "ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார்" என்பதுவேயாகும். ஒரு பொய்யான இந்த செய்தியை திமுகாவே, தமது ஊடகங்கள் மூலமாக இடைவிடாது ஒளிபரப்பி, சசிகலாவின் சாம்பிராச்சியத்தை உடைத்தது. 

உண்மையில் ஜெயா கொல்லப்பட்டாரா? இது சாத்தியமா? என்னைப்பொறுத்தவரை ஒரு போதும் முடியாது.!

ஜெயலலிதா இறக்கும், போது அவர் சாதாரண குடிமகள் அல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர். இந்திய உளவுத்துறைகளின் கண்களில் மண்ணைத்தூவி இதைச் செய்ய முடியாது. அப்படி நடந்திருந்தால் இந்திய அரசின் உளவு வலையமைப்புகள் கேள்விக்குரியதாகிவிடும்.! 

ஆனால், இவர்கள் குறிப்பிட்ட திகதியில் அவர் இறக்கவில்லை.! அதற்கு முன்னரே இறந்துவிட்டார் என்பதே எனது நம்பிக்கை. இது மோடி அரசுக்கும் தெரியும்.! 

ஆக, எல்லோரும் கூட்டு கள்வர்களே? 

என்னைப் பொறுத்தவரை சசிகலா கும்பல் பெரிய மாஃபியா என்றால் OPS சின்ன மாஃபியா மட்டுமல்ல சந்தர்ப்பவாத அரசியல்வாதியுமாவார். இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதற்காக இவர்கள் செய்த ஊழல்களை மன்னிக்க முடியாது, வக்காலத்து வாங்கவும் முடியாது.!
 
இந்த சம்பவங்கள் அனைத்தும் நடக்கும் போது, இவர்களுடன் கூடவே இருந்து வக்காலத்து வாங்கிய OPS தான் "அம்மா ஆவியுடன் கதைத்துவிட்டு" நல்லவனாகி விட்டார். இதை ஏன் அவர் முன்னமே செய்யவில்லை.? 

தனது பதவிக்கு ஆபத்து வந்ததும் இந்த நாடகத்தை அரங்கேற்றி விட்டார். இதற்கான கதை ஸ்டாலின், டைரக்ரர் மோடி தான்.! 
 

சரி, யார் முதல்வராக வரவேண்டும்? 

சந்தேகமில்லை, எனது பார்வையில் இப்போதைக்குOPS தான் வரவேண்டும்.! 
குழப்பமாக இருக்கின்றதா? 
தூரநோக்கில் சிந்தித்தால், சசிகலா வருவாராகின் "அடுத்த திமுக போன்ற குடும்ப அரசியலொன்று" தமிழ்நாட்டில் உருவாகிவிடும். 

மீண்டும் அதிமுக புத்துயிர் பெற்று, தமிழ்த்தேசியத்தின் கழுத்தை அது நெரிக்கும். திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் ஊழல் பூதங்களும் தமிழரை சுரண்டியே, "தமிழர்களைக் கற்காலத்துக்கு" கொண்டுபோய் விடுவார்கள்.! 
 

பன்னீர் ஆட்சிக்கு வந்தால் நாலு ஆண்டுகளில் ஒரு கொள்ளைக்கூட்டம் அழியும்.! 
அதே போன்று கருணாநிதியின் "இருப்புக்கு" பின் திமுகவும் தானாகவே சிதறிப்போகும் என்றே நான் நம்புகின்றேன்.! 

அதற்கான நேரம் நெருங்கி வருக்குன்றது. மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.! 

ஒருவரது மரணத்தின் மூலம், ஒருவர் செய்த தவறுகள் அல்லது அவரது பாவங்களை போக்கப்படுமா? அல்லது மன்னிக்கப்படுமா? 
 

இல்லை.! அதற்கான வரலாறு ஹிட்லரையோ அல்லது முசோலினி போன்றவர்களையோ கொலைகாரர்களாகவே பதிவு செய்துள்ளது. அதிலிருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பாடங்களை எடுக்க வேண்டும்.! 

அது போலவே தான் ஜெயலலிதா அவர்களும் செய்த ஊழல்களும், வன்முறைகளும் மன்னிக்க முடியாதவை. இன்று "அம்மா "என பூசி மெழுகி தூய்மை வேஷம் போர்த்திவிட்டனர் அவரின் அடிமைகள்.! 
அதைத் தமிழக மக்கள் நம்பும் நிலையிலேயே உள்ளனர். 
 

இதுபோலவே தான் நாளைக்கு கருணாநிதிக்கும் தூய்மை பட்டம் கொடுத்து, அழகுபார்ப்பர் தமிழர்.! 

தமிழக மக்கள் சின்னத்திற்கு ஓட்டுப்போடும் வழக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும். ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து, வந்தவரைக்கும் லாபமென்ற இழிநிலை மாறவேண்டும்.! 

உங்கள் வாக்காளர்களின் தகுதியும், நேர்மையையும் கருத்திலெடுத்து, உங்கள் தலைவர்களை தெரிவு செய்யுங்கள்.! 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்திற்காக அவரை முதல்வராக்க துடிப்பது அடிமை மனப்பான்மையின் உச்சம். இது மிகப்பெரும் கேவலம்.!
 

தமிழக மக்களே.! இரண்டு திராவிடக்கட்சிகளும் மிகப்பெரும் வியாபாரிகள். அதை நீங்கள் எப்போதும் உணரவேண்டும்.! 

உங்கள் அடுத்த சந்ததியின் வாழ்க்கையை முன்னிட்டே உங்கள் அரசியல் தெரிவு எப்போதும்  இருக்க வேண்டும்.! 
உங்களுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments