Latest News

February 10, 2017

அமெரிக்க ஜனாபதிக்கு வந்த சோதனை
by admin - 0

 
அமெரிக்க அதிபர் டொனால் ரம், தனது சிறப்பு அதிகாரத்தை பாவித்து ஒரு சட்டத்தை அமுலாக்கினார். 7 முஸ்லீம் நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என்னும் தடை உத்தரவு தான் அது. அதனை எதிர்த்து மனித உரிமை அமைப்பு ஒன்று தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி. ரம் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். இதனால் ஆடிப்போன ரம். தனது வக்கீலை வைத்து மேல் மேல் நீதிமன்றில் வழக்கு தொடுத்தார்.

3 பேர் கொண்ட சட்டமா அதிபர் திணைக்கள் நீதிபதிகள், இந்த வழக்கை விசாரித்து வந்தார்கள். சற்று முன்னர்(10.02.2017) அவர்கள் அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்கள். அது என்னவென்றால், முதல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என்றும். ரம்பின் இந்த உத்தரவை தாம் தடைசெய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம் தலையில் பெரும் இடி இறங்கியுள்ளது.

இதற்கு ஒரே வழி அமெரிக்க உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுத்து , தனது உத்தரவு சரி என்று தீர்ப்பை பெறவேண்டும். உச்ச நீதிமன்றமும் ரம்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால் அது பெருத்த அவமானத்தில் போய் முடியும். எனவே ரம்பின் சட்ட வல்லுனர்கள் என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவையே இச்செய்தி கதிகலங்க வைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் ரம்புக்கு வாக்குபோட்ட அனைவரும் ஏன் இப்படிச் செய்தோம் என்று தலையில் கை வைக்கும் அளவு ரம் துள்ளிக் குதிக்கிறார். 






Athirvu
« PREV
NEXT »

No comments