Latest News

February 04, 2017

இந்தியத்தின் வல்லரசுக்கனவும் எண்ணூர் எண்ணெய்க் கசிவு.! ஈழத்து துரோணர்.!!
by admin - 0

இந்தியத்தின் வல்லரசுக்கனவும் 

எண்ணூர் எண்ணெய்க் கசிவு.!

ஈழத்து துரோணர்.!!
இந்தியா
 

எண்ணூர் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. சில நாட்களாக மசகு எண்ணையை, கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன.! 

இன்றைய நடப்பில் "வல்லரசுக்கனவில்" மிதக்கும் இந்திய அரசு, எண்ணெயை அகற்றுவதற்கு பாவிக்கும் "அதி நவீன கருவி தண்ணீர் அள்ளும் வாளியே" என்றால் இதில் எந்த அதிசயமும் எனக்கு இல்லை. :)

இதற்கு முன், இதுபோல பல விபத்துகள், பல நாடுகளின் கடலில் நடந்துள்ளது. அவர்கள் பெரும்பாலும் கடலில் வைத்தே மசகு எண்ணெயை, இராச்சத உள்ளிழுக்கும் இயந்திரங்கள் மூலம் அகற்றறிவிடுவர். (வீடுகளில் தூசுகளை உள்ளிழுக்க பயன்படும் ஹூவர் மிசின் போன்ற தொழில்நுட்பம்)  

அதிலிருந்து, சிதறிக்கரையை அடையும் குறைந்த சதவிகித எண்ணெயை, மக்கள் உதவி நாடாது அந்த அரசுகளே துப்பரவு செய்துள்ளது. 

ஆனால், தமிழ்நாட்டில் அந்த எண்ணெய், கரையை அடைந்த பின்னரே, கைகளால் அள்ளி எடுக்கும் நிலையிலேயே, இந்திய அரசு உள்ளது. இப்போது பொதுமக்களின் உதவியை பெற்றே, இந்த துப்பரவுப்பணியை செய்யும் நிலையிலேயே தமிழக அரசும் உள்ளது.! 

இந்த லட்சணத்தில் வல்லரசுக் கனவு வேறு உள்ளது.! 

சரி இந்தியா வல்லரசாகுமா? 

என்னைக்கேட்டால், இந்தியத்தின் நிறைவேறாத பெரும் கனவு, இது தான் என்பேன்.! 

இந்திய ஒன்றியத்தில் இந்த நிமிடம் வரை 30%மக்கள் கழிப்பிட வசதியற்ற நிலையிலேயே வாழுகின்றனர்.
50%த்திற்கு மேற்பட்ட மக்களுக்கு, ஒரு நேர உணவே கிடைக்கின்றது.(அதுவும் கிடைக்காத மக்களின் தொகையும் அதிகம்) 

ஊழலின் பெருத்து வீங்கியிருக்கும் இந்திய அரசியல் கழுகுகள், முதலீடு செய்வதே அரசியலில் தான். அதற்கு வாழும் சாட்சி கலைஞர் கருணாநிதியும், மறைந்த தலைவி செல்வி ஜெயலலிதாவுமே போதும்.

வெறும் மஞ்சள் பையுடன்  வந்த கலைஞரும், அவரது வாரிசுகளின் சொத்துக்களும், உலகப் பணக்காரர் பட்டியலில் சேர்க்குமளவுக்கு ஊழலில் திளைத்துள்ளனர். இது தெரிந்தும் இவர்களுக்கே மக்கள் ஓட்டுபோடுவதில் உள்ளது, இவர்களின் அரசியல் சாணக்கியம்.!

இவர்களைப் போலவே ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு கருணாநிதி இருக்கின்றார். 
ஆக, அரசியில்வாதிகளிடமும், பெரும் பண முதலைக்களிடமுமே, இந்திய மக்களின் வரிப்பணங்கள் போய் சங்கமிக்கின்றன.! 

இந்த ஊழல் நிர்வாகங்கள் அழிந்து, நாட்டையும் மக்களையும் மட்டுமே நேசிக்கும் தலைமை உருவாகவேண்டும்.! 

இந்த அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்து, மக்களின் வாழ்வாதாரம் உயராமல், வல்லரசுக்கனவும், வெறும் கனவே.!

ஆனால்,இதில் உள்ள உண்மை இந்த ஊழல் வாழ்க்கையிலிருந்து மக்களும் மாறப்போவதில்லை (இந்த வாழ்க்கை அவர்களுக்கு பழகி விட்டது), அரசியல்வாதிகளும் திருந்தப்போவதில்லை.!

சரி, இந்திய இராணுவத்தின் தற்போதைய  ஆயுத பலம் என்ன? 

இன்றைய திகதியில், உலக இராணுவப்பலத்தில் இந்தியா நாலாமிடத்தில் உள்ளது. 
இந்த கணிப்பீட்டை எதை வைத்து கணிக்கின்றனர்.? 
இதில் பல காரணிகள் இருந்தபோதும், முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன.! 

#ஒன்று பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை 

#படையத்தளபாடங்கள் பற்றிய கணக்கீடு 

#ஒரு அரசு பாதுகாப்பு செலவுக்கென்று ஒதுக்கும் பணத்தின் அளவு 

இந்த கணிப்பீட்டில், இந்தியா நான்காமிடத்தில் இருக்கின்றது. இந்திய இராணுவத்தில் 15லட்சம் பேர் பாதுகாப்பு படையில் இருக்கின்றார்கள். 

#தாங்கி 6465,( ரசிய தயாரிப்பு T-55, மற்றும் இந்தியத்தயாரிப்பு அர்ஜுன் தாங்கி உட்பட)

#குண்டுவீச்சு விமானங்கள் 2086 உள்ளது( இதில் பழைய மிராச் தொடங்கி 200 Sukhoi S-30Mki உட்பட) 

#உலங்குவானூர்தி 646 ( பழைய போக்கு வரத்து உலங்கு வானூர்தி உட்பட)

#விமானம் தாங்கி கப்பல் 2

#நாசகாரி கப்பல் 10 அதற்கு அடுத்தராக தாக்குதல் கப்பல் 14 (சிறிய படகுகள் கணக்கில் இல்லை)

#அண்ணளவாக 100 அணுவாயுத  முனைகள் (உறுதிப்படுத்தப்படாத தகவல்), மற்றும் அக்கினி-5,பிரமோஸ், பிரித்துவி போன்ற ஏவுகணைகள் இந்திய அரசின் நம்பிக்கை ஆயுதங்கள்.

ஆனால், இதைவிட இன்னொரு மடங்கு அதிக ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளது. இதில் கவனிக்கவேண்டியது "இந்திய இராணுவத்திடம் ஐந்தாம் தலைமுறை ஆயுதங்கள் கையிருப்பு" இல்லை. 
அதை உற்பத்தி செய்யுமளவுக்கும் தனித்தகமை என்பதும், இந்தியாவிடமில்லை.! 

ஆனால், சீனாவோ ஐந்தாம் தலைமுறை ஆயுதங்களை தானே உருவாக்குகின்றது.(இதன் பாவனைத்திறனின் நம்பகம் சோதிக்கப்படவில்லை) 

இன்றளவும் இந்திய அரசு அதி நவீன ஆயுதங்களை, வளர்ந்த நாடுகளில் இருந்தே கொள்முதல் செய்கின்றது. உதாரணத்துக்கு போனவருடம்,பிரான்சுடன் 117 அதி நவீன ராஃபெல் (Rafale) போர் விமானங்கலும், அணுசக்தியில் இயங்ககும் அணுவாயுதங்களை காவிச்செல்லும் நீர்மூழ்கி கப்பலுக்கும், பல பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. 
 

இந்திய அரசு, ரசியாவுடன் இணைந்து Sukhoi S-30Mki தாக்குதல் விமானத்தை உருவாக்கிய போதும், அந்த "விமானங்களின் நம்பகத்தன்மை" இல்லாதமையே பிரான்சுடனான இந்த விமான ஒப்பந்தம்.! (இரசியாவுடன்,இஸ்ரேலுடன், பிரான்சுடன் எல்லோருடனும் கூட்டு தயாரிப்பில் தான் ஈடுபட்டுள்ளது.) 
 

தற்போது அமெரிக்க இராணுவம் தனது படையத்தளபாடங்களை பெருக்கியபோதும், ஐரோப்பிய நாடுகள் தங்களது படைத்துறையில், நவீன ஆயுதங்களை இணைக்கும் போதும், பழைய ஆயுதங்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்றுவிடுவர். (உலகில் ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது.) 

ஆக, எண்ணிக்கையில் அதிக ஆயுதங்களை இந்திய அரசு கொண்டிருந்தபோதும், அவைகளில் பெரும்பான்மையான ஆயுதங்கள் 30,40வருடங்கள் பழமையானவையே. 

இன்றைய நவீன உலகில் இந்தியா, பாக்கிஸ்த்தானுக்கு மட்டுமே படம் காட்ட முடியும். 

அதனால் தான் "சீனன் எவ்வளவு சீண்டினாலும் தெரியாதது போல வேறு பக்கம் பார்த்தபடி" உள்ளது இந்தியம். 
 

சினிமா மோகத்தில் உழலும் இந்திய மக்களுக்கு, இந்திய சுதந்திர தினத்தில் காட்டப்படும், இராணுவத்தின் படையத்தளபாடங்கள், மிகப்பெரும் ஆச்சரியம் என்பதில் சந்தேகமில்லை. 

சீனாவுடன், போரென்று உருவானால், இந்திய இராணுவத்தால், சீன இராணுவத்திற்கு முன்னாள் நிற்கவே  முடியாதென்பதே யதார்த்தம்.!
 
ஆக, இந்தியம் வல்லரசு கனவில் மிதப்பதை விட்டு, மக்களின் வாழ்வாதாரத்தையும், நீர் மேலாண்மையையும்  உயர்த்தினாளே போதும், இந்தியா தானாக வல்லரசாகிவிடும். ஏனெனில் மூன்றாம் உலகப்போர் குடிநீருக்காகவே நடக்குமென்பது போர் வல்லுனர்களின் கணிப்பு. 
 

அதை கருத்தில் கொண்டே சீன தனது இந்திய எல்லைகளை கைப்பற்ற முனைகின்றது.! 

தமிழ்நாட்டு தமிழர்களும் திராவிட ஆட்சிகளின் பிடியிலிருந்து வெளிவரவேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க போராடவேண்டும். அதற்கான அரசொன்றை உருவாக்க வேண்டும்.! 
தவறினால்.......???
உங்களுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments