
சென்னை: மெரினா கடற்கரைப் பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு திடீரென 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர், காவல்துறை அதகாரிகள் கோரிக்கை விடுத்தும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.இந்நிலையில் மெரினா கடற்கரைப் பகுதியில் இன்று திடீரென 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் போராட்டத்தை முடக்கி கூட்டத்தை கலைக்க போலீசார் குவிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் நாளை சட்டசபைக் கூட்டம் தொடங்குவதால் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments
Post a Comment