Latest News

January 22, 2017

தமிழரின் ஜல்லிக்கட்டு போராட்டமும் இந்தியப் புலனாய்வு முறியடிப்பும்.! ஈழத்து துரோணர்.!
by admin - 0

தமிழரின் ஜல்லிக்கட்டு போராட்டமும் 
இந்தியப் புலனாய்வு முறியடிப்பும்.!

ஈழத்து துரோணர்.!!
*******************************ஒரு நாட்டின் தேசிய கொள்கை என்பது, நிரந்தரமாக வகுக்கப்பட்ட ஒன்று. கடைசிவரை அதன் பாதையிலேயே அவர்கள் பயணிப்பார்கள். "காலத்துக்கேற்ப அந்தப்பாதையில் வரும் மாற்றங்களுக்கு, சில மாறுதல்களை செய்து" தொடர்ந்து அதிலேயே பயணிப்பார்கள்.! 
 


அந்த மாறுதல்களை பெரும்பாலும், ராஜதந்திர ரீதியாக பொதுவெளியில் தீர்க்க முனைவார்கள். 
அப்படி முடியாத போது, தங்களின் புலனாய்வு ஏஜென்சிகள் ஊடாக, ரகசியமாக தீர்வு காணுவர் அல்லது அகற்றுவர்.

ஒரு நாட்டின் உளவமைப்பென்பது, அந்த நாட்டின் முதுகெலும்பு போன்றது. இவர்களின் முக்கிய பங்கு, அவர்களின் நாடு, தேசிய கொள்கையில் இடரில்லாது பயணிப்பதற்குறிய பாதையை உருவாக்குவது, அல்லது தடைகளை அகற்றுவது. 
 
தேசங்களின் ஆரம்பகாலப் புலனாய்வின் போது, தங்கள் தேச நலனுக்காக எதிராளியை விலை பேசிப்படியவைத்தனர். அந்த பேரம் பேசுதல்கள் படியாமல் போனால், அந்த இலக்கை, "தங்களில் பழிவாராதது போன்ற தோற்றத்தை உருவாக்கி" அழித்தனர்.     

இன்றைய நவீன காலகட்டத்தில் "வெளித்தெரியும் எதிர்ப்பு" இலக்கொன்றை, நேரடியாக அழிப்பது குறைந்து விட்டது. அதற்கு காரணம் தகவல் தொடர்பின் அபரிதமான வளர்ச்சி என்றால், அது மிகையாகாது. 
 
இப்போதைய நவீன யுகத்தில் இந்த இரகசிய நடவடிக்கைகள், மக்களிடம் உடனேயே, எதோ ஒருவிதத்தில் அம்பலப்படுத்துகின்றன.அதனால் தான் இப்போதைய புலனாய்வு நடவடிக்கைகளும், மாற்றம் பெற்றுவிட்டன. 
 

மேற்கூறிய இரண்டு நடவடிக்கையும், புலனாய்வு அமைப்புகளைப்பொறுத்தவரை, மிகவும் இலகுவான ஒன்று.!

ஆனால், இப்போது அரசுகளுக்கு ஏற்படும் தலைக்குனிவையும், எதிர்ப்பையும் அகற்றுவதற்கு அல்லது மடைமாற்றுவதற்கு,பல உத்திகளை உளவுத்துறைகள் கையாள்கின்றன. 
 
இந்த நடவடிக்கைகள் நேர, பண விரையம் மற்றும் நம்பகத்தன்மையற்ற, காரணிகள் இருந்த போதும், வேறு வழியில்லாது, இந்த உளவு நடவடிக்கையை உலகின் முன்னணி நாடுகள் கையாள்கின்றன.

அதில் முக்கியமான உத்தியொன்றை பார்ப்போம். 
இந்த உத்தியை இந்திய உளவுத்துறையினர் தான், அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அது என்ன நடவடிக்கை? 

அதாவது,ஓரளவு பிரபலியமான "தேச விசுவாசக் கொள்கையுடையவர்களை" இனம் கண்டு, அதில் "இளையோரைக்" கவரும், ஒரு சிலரை தெரிவு செய்வது.  

பின் அவர்ளை தொடர் கண்காணிப்பின் பின், அவர்களின் நம்பகத்தன்மையை  கணிப்பிட்டு, அவர்களுக்கேற்றாற் போல, அதில் சிலரை நேரடியாக தங்கள் தேவையைக் கூறி, தங்களுடன் பயணிக்க வைப்பது ஒரு முறையாகும். 

அடுத்தது, இன்னும் சிலரை அவர்களுடன் எந்தவித நேரடித்தொடர்பும் இல்லாது, அவர்களுக்கே தெரியாது அவர்களைக் கையாள்வது.!

இது உங்களுக்கு குழப்பமாக இருக்கும்? 

எப்படி ஒருவருடன் நேரடித் தெடர்பில்லாது அவரைக் கட்டுப்படுத்துவது? 
அது மிகவும் இலகுவானது.! 

ஆட்சியில் இருக்கும் அரசுக்கு, அரசியலில் பங்குபற்றாத தோற்றப்பாட்டுடன் கூடிய, மிக நெருங்கிய நட்பை கொண்டிருக்கும், சில VIP கள் இருப்பார்கள்.(உதாரணத்திற்கு ரஜனி மோடியின் நெருங்கிய நண்பர். அவருக்காக இவர் எதுவும் செய்வார்) 

இவர்கள் போன்றவர்களை, அரசியல் தலைமைகள், நண்பன் என்ற ரீதியில் அணுகி உதவி பெறுவார். இவர்களை நெறிப்படுத்தி, அந்த இரண்டாவது தெரிவினருக்கு, VIP கள் ஊடாக நட்புகள் கிடைக்கும் அல்லது நட்பு உருவாக்கப்படும்.! 

இவர்களுக்கு VIPகளின் உறவென்பது, அவர்களின் கனவு போன்றது. அவர்களின் சொற்கள், வேத வாக்காக அவர்களுக்கு இருக்கும். 
இவர்களின் அடி மனதில், அவர்களின் கருத்துக்கள், மாற்றமெதுவும் இல்லாது உள்வாங்கப்படும். 
அந்தக்கருத்து, இவர்களை அறியாது, இவர்களையே கட்டுப்படுத்தும்.! 

சரி, இப்போது மாணவர்களின் மெரீனா புரட்சிக்கு வருவோம். இந்தப் புரட்சியென்பது தமிழர் சார்ந்த தேசியத்தை அடையாளப்படுத்தியே வெளிக்கிளம்பியுள்ளது. சில நூறு பேராக இருந்திருந்தால் இன்று தடியடி மூலம் அடக்கப்பட்டிருக்கும். 

இன்று பல லட்சங்களைக் கடந்த மக்கள் வெள்ளம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுவிட்டது. இப்போது இந்த எழுச்சியை எப்படி இந்திய அரசு கையாளப்போகின்றது என்பதை உலக நாடுகள், உன்னிப்பாக அவதானிக்கின்றன. 

சரியாக சொல்வதனால் இதுபோன்ற மக்கள் போராட்டங்களை, இந்திய உளவுத்துறையினர் ஏலவே வெற்றிகரமாக கையாண்டுள்ளனர். 

அதற்கு, உதாரணம் கூடங்குள அணுவுலை மற்றும் காவிரிநதிநீர்ப் பிரச்னைக்கு எதிரான போராட்டங்கள், நீர்த்துப்போக வைக்கப்பட்டதில், இந்திய உளவுத்துறைகளின் கைகள், கடைசி எல்லைவரை நீண்டிருந்தது.! 

இந்தியம் என்பது, ஏலவே நான் கூறியது  போல "பல துணிகளால் தைக்கப்பட்ட ஆடையே" இந்திய ஒன்றியமாகும்.! 

இத்துப்போன அந்த ஆடை, எப்போது கிழியுமென்ற ஆபத்திலேயே இப்போது உள்ளது. மிகப்பழமை வாய்ந்த பல மாநிலங்களின் கூட்டாட்சியில் இருக்கும், இந்திய ஒன்றியத்திற்கு, இப்போதைய பெரும் பிரச்சனை "தமிழ் தேசியமும், அதைப்பேசுபவர்களுமே".! 

தமிழ் தேசிய வாதிகளை "கத்தியில் நடப்பது போல்"  மிகக் கவனமாக கையாள்கின்றது, இந்திய உளவுத்துறை.! 

தமிழ் தேசியவாதிகளை, வெளிப் பார்வைக்கு "கண்டும் காணாமலும் விடுதல்" முறையை கையாண்டு, மறைமுகமாக இவர்களுக்கு எதிரான பரப்புரைகளை, மிக கட்சிதமாக செய்கின்றன, இந்திய உளவுத்துறைகள். அதற்கு இந்திய ஊடகங்களும் துணை போகின்றன, அல்லது பணிய வைக்கப்பட்டுள்ளன.! 

தமிழ் தேசியம் மக்களிடத்தில் போய்ச் சென்றுவிடாதபடி, அதற்கு எதிரான கருத்துக்களை விதைத்து, தமிழ் தேசியத்திற்கு போராடுபவர்களின்," உளவுரணை சிதைத்து", அதிலிருந்து அவர்களை அகற்றும் உத்தியே இதுவாகும். இதைத் தான் எல்லா அரசுகளும் இப்போது கையாளுகின்றன. 

அதற்கு உதாரணம், இறுதி யுத்தம் நடந்த போது ஐரோப்பிய நாடுகளில், எமது மக்கள் லட்சக்கணக்கில் வீதியில் நின்று போராடிய போதும், திட்டமிட்டு சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து எமது இனப்படுகொலையை மறைத்ததை, யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்? என்றே நம்புகின்றேன். அதன் பின்னால் சர்வதேச உளவு நிறுவனங்களே இருந்தன என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இந்த "தமிழ் தேசிய" முறியடிப்பு புலனாய்வுக்கு, உண்மையான தேச அபிமானிகளும், பலியாகிவிடுவதுதான், இவர்களது புலனாய்வின் வெற்றி.!  

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள், தமிழர் என்ற அடையாளத்துடனும், இறுமாப்புடனும் எழுச்சிகொண்ட மாணவர் போராட்டம், இன்று மடைமாற்றம் செய்யப்படுகின்றனவோ? 
என்ற அச்சம் எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.? 

இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் தடை செய்து, தமிழ் இளையோர் என்ற, அடையாளமே முன் நின்றது. அதுவரை எல்லாம் சரியாகவே நகர்ந்தது.! 

இப்போது மெது, மெதுவாக உள்நுழைந்த, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் இரண்டாம் கட்ட நாடிகளின் கைகளின், மாணவர் அறியாமலே தமிழர்  போராட்டம் கைமாறிச்சென்று விட்டது.! 

இப்போது இந்த நடிகர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை கவனியுங்கள்.! 

இப்போது மக்கள் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக, "இவர்கள் தான்" இந்த எழுச்சியின் நாயகர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவார்கள், அல்லது உருவாக்கி விட்டார்கள்.! 

இவர்கள் யாரென்று பார்த்தால் தமிழனென்று வெளியில் கூறி ,இந்திய தேசத்தின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள்/இருப்பவர்கள்.!

இப்போது மெது, மெதுவாக தமிழ் தேசியம்/தமிழர் அடையாளம் மறைக்கப்பட்டு, இந்தியம் திணிக்கப்படும்.! 

இந்த நிலை தொடருமானால்? நாளடைவில் இது இந்திய ஒருமைப்பாட்டு, போராட்டமாக மாற்றம் பெரும்.! 

இது எனக்கு, தமிழர் இன்னும்  "சினிமா கதாநாயகர்களை, நிஜக்கதாநாயகர்கள்" என்று நம்பும்,  மாயையில் அல்லது உளவியல் நோயிலிருந்து மீளவில்லையோ? என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது.!  

மெரீனாவில் தலைவரின் படத்துடன் ஆரம்பித்த தமிழர் போராட்டமும், தலைவரின் "தமிழ்த்தேசிய சித்தாந்தமும்" இந்திய தேசத்துக்கு ரசிப்புடையதாக நிச்சையம் இருக்கப் போவதில்லை.! 

அந்த தமிழ் உணர்வை அகற்றவே, அவர்கள் மறைமுகமாகப் போராடுவார்கள்.! 

இதில் ஒரு உண்மையை,இப்போது இந்தியம் உணர்ந்திருக்கும். இந்த போராட்டத்தில் "இந்தியம், திராவிடம்" என்ற சொல்லாடல் மறைந்து, "நாங்கள் தமிழர்" என்ற கோசம் வானை எட்டியுள்ளது. இதுவே தமிழர் தேசத்துக்கான முதல்படி.! 

மாணவர்கள் விழிப்படைய வேண்டிய நேரமிது.! 
கபட நோக்கம் கொண்டவர்களை அகற்றுங்கள்.!

உங்கள் ஆரம்பப்புள்ளி சரியானது. அதன்படியே பயணியுங்கள். அல்லது போனால் உங்கள் போராட்டம் "விழழுக்கு இறைத்த நீர் போல்" ஆகிவிடும்.! 

இப்போது தமிழருக்கு இருக்கும் ஒரே ஒரு வழி "தமிழ் தேசியம்" மட்டுமே, என்பது எனது அனுபவத்தின் வெளிப்பாடு.! 

தமிழ் தேசியம் என்ற தெடர்ச்சியில் பயணித்தால் மட்டுமே, தமிழன் மீட்சி பெறுவான். அல்லது போனால் நாம் அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.! 
ஏக்கங்களுடன் துரோணர்.!
« PREV
NEXT »

No comments