Latest News

January 15, 2017

இராணுவப்புலனாய்வு ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்ட எமது நமசிவாயம் முரளிதரன் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
by admin - 0

இராணுவப்புலனாய்வு ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்ட எமது மண்ணின் மைந்தன்  நமசிவாயம் முரளிதரன் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
 


வடமராட்சி அல்வாய்கிழக்கு பகுதியைச்  சேர்ந்த நவசிவாயம் முரளிதரன் 2006.01.16 அன்று இராணுவப்புலனாய்வு பிரிவு ஆயுததாரிகளினால் இராச வீதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11ஆம் ஆண்டுகள் நிறைவுபெறுகிறது.

 சம்பவதினத்தன்று கனடா நாட்டில் இருந்து விடுமுறைக்காக வந்த அவரது சகோதரனுடன் சிறுப்பிட்டி இராச வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணிந்தவேளை 2006.01.16 அன்று மாலை 5:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற இராணுவப்புலனாய்வு பிரிவு ஆயுததாரிகள் சுட்டுப்படுகொலை செய்தனார்.



எமது மண்ணிற்கு சிறுவயது முதல் முரளிதரன் சிறந்த பல சமூக சேவைகளைச் செய்து வந்தவர், மாலை சந்தை சிறி வரதராஜ விநாயகர் ஆலயத்தில் 1995 ஆம் ஆண்டு ஆலய புனரமைப்பு பணிகளில் முக்கிய பங்குவகித்தவர். அத்துடன் சிறந்த சித்திரக்கலைஞராக விளங்கிய முரளிதரன் ஆலயத்தின் உள்வீதியைச்சுற்றி பல சுவாமி படங்களை தனது திறமையினால் வரைந்தவர். இரவு பகல் இன்றி ஆலயத்தொண்டுகளை, நண்பர்களுடன் மேற்கொண்டார். 

அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம் மற்றும் மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் போன்றனவற்றுக்கு முக்கிய பணிசெய்தவர். 

அத்துடன் தாயகத்தின் மீது அதிக காதல் கொண்டமையினால் இராணுவப்புலனாய்வு பிரிவு ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments