
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னால் முதல்வருமான ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, அவர் கடந்த சட்டபேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே நகர் தொகுதி காலியாக இருக்கிறது.
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவில் பதவியேற்றார். எம்.எல்.ஏ.கள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது சசிகலா இந்த ஏற்பாடு தற்காலிகமானது என்று சொல்லி சமாதானப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆறு மாதத்திற்குள் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் சசிகலாவை தேர்தலில் போட்டியிடும்படி அவரது கணவர் நடராஜன் மற்றும் அவரின் உறவினர்கள் கூறிவருவதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாக ஆர்.கே. நகரில் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில், சசிகலா தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் பதவிக்கு குறிவைக்கவும் காத்திருக்கிறார் என கட்சிவட்டாரத்தில் பலமாக முணுமுணுக்கப்படுகிறது.
No comments
Post a Comment